விராட் கோலி தன்னோட டி20 கேப்டன்ஷிப்பை விட்டுத் தரவேண்டிய நேரம் வந்துடுச்சு.. ஹுசைன் உறுதி
லண்டன் : ஐபிஎல் 2020 தொடரை கைப்பற்றியுள்ளதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய 5வது கோப்பையை வெற்றி கெண்டுள்ளது.
மேலும் சிஎஸ்கேவிற்கு அடுத்து தன்னுடைய அடுத்தடுத்த ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா இந்திய அணியின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைனும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி
ஐபிஎல் 2020 தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து சில தினங்களுக்கு முன்பு முடிந்துள்ளது. இந்த சீசனின் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பெற்றுள்ளது. இது அந்த அணியின் 5வது கோப்பையாகும்.

மும்பை இந்தியன்ஸ் சாதனை
மேலும் சிஎஸ்கேவிற்கு அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த கோப்பைகளை பெற்று சாதனை புரிந்துள்ளது. இந்த சீசனில் காயம் காரணமாக சரியான ஆட்டத்தை பதிவு செய்யவில்லை என்றாலும் தன்னுடைய அணியை சரியாக வழிநடத்தி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

ரோகித் நியமிக்கப்பட கோரிக்கை
மேலும் இறுதிப்போட்டியிலும் 68 ரன்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் ரோகித். இந்நிலையில், அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளதாக பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தையே முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைனும் பதிவு செய்துள்ளார்.

ரோகித் பதவியேற்க வேண்டும்
ஸ்கை ஸ்போர்ட்சுக்காக பேசிய நாசர் ஹுசைன், இந்திய அணியின் டி20 கேப்டன் விராட் கோலி தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டிய நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பொறுப்பு ரோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரியான முடிவுகள்
தன்னுடைய பொறுமையான கேப்டன்ஷிப்பால், சரியான முடிவுகளை சரியான நேரத்தில் ரோகித் சர்மா மேற்கொள்வதாக ஹுசைன் கூறியுள்ளார். குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சிறப்பாக விளங்குவதாகவும் இரட்டை சதங்களை அடித்துள்ளதையும் ஹுசைன் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications