சொன்னதை செய்து காட்டிய ரோகித் சர்மா..!! 10 வருடத்திற்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றினார்
மும்பை: ஒரு சபதத்தை போட்டு, அதில் ஜெய்த்து காட்டுவதில் இருக்கும் சுகமே வேறு ஏதிலும் கிடையாது.
போட்ட சபதத்தை ஜெய்த்து காட்டுவது என்று கூறினால் அண்ணாமலை ரஜினி தான் நமக்கு நினைவுக்கு வருவார்.
ஆனால் அது வெறும் நிழல் தான். உண்மையிலேயே அப்படி ஒரு சபதத்தை போட்டு அதில் வென்றும் காட்டியுள்ளார் ரோகித் சர்மா

2007ஆம் ஆண்டு அறிமுகம்
விராட் கோலி எல்லாம் யார் என்று தெரியாத காலத்திலேயே ரோகித் சர்மா இந்திய அணிக்காக முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2007 ஆம் ஆண்டே விளையாடினார். ஆனால் போதிய வாய்ப்பு அப்போது அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு பின் அணிக்கு வந்த விராட் கோலி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடி விட்டார்

புத்தாண்டு சபதம்
சர்வதேச கிரிக்கெட் விளையாடி 5 ஆண்டு ஆகியும் உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த ரோகித் சர்மா,2012 ஆம் ஆண்டு புத்தாண்டின் போது ஒரு புத்தாண்டு சபதத்தை போட்டு கொண்டார். அதில், எதையும் சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், அதிர்ஷ்டம் தான் எல்லாம் என்று நினைக்காமல், கடுமையாக உழைக்க வேண்டும் என்று பொருள்பட 10 ஆண்டுகளுக்கு முன் டிவிட் போட்டுள்ளார்.
Recommended Video

ஹிட்மேன் அவதாரம்
அவர் சொன்னது போல், சரியாக 10 ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் தவிர்க்க முடியாத தலைச் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார். சிறந்த டெஸ்ட் வீரர், கேப்டனாக 5 ஐ.பி.எல். கோப்பை, ஆசிய கோப்பை, ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம், ஒருநாள் போட்டியில் 9205 ரன்கள், டி20 போட்டியில் 4 சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பல்வேறு சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

வென்று காட்டிய ரோகித்
10 ஆண்டுகளுக்கு முன் சாதாரண, பத்தோடு பதினொறு வீரராக இருந்த ரோஹித் சர்மா தற்போது ஹிட்மேனாக அவதாரம் எடுத்து வெற்றி கண்டுள்ளார். ரோகித் சர்மா போல் நாமும், நமது புத்தாண்டு உறுதிமொழி, சபதங்களை கடுமையாக பின்பற்றி வென்று காட்ட முயற்சிப்போம்.


Click it and Unblock the Notifications