Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

187 போட்டிகளில் 200ஐ தாண்டிய ரோஹித் சர்மா.. தோனியை முந்த இன்னும் 17 தான் பாக்கி

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டினார்.

சிக்ஸர் அடிப்பதில் ரோஹித் சர்மா கில்லியாக இருக்கிறார். இதில் தான் புதிய மைல்கல்லை தொட்டுள்ளார்.

நேற்றைய போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சரமாரியாக பறக்கவிட்டு நான்கு சிக்ஸர்கள் அடித்தார்.

குறைந்த இன்னிங்க்ஸ் சாதனை

குறைந்த இன்னிங்க்ஸ் சாதனை

ரோஹித் சர்மா நேற்று அடித்த நான்கு சிக்ஸர்களோடு சேர்ந்து ஒருநாள் போட்டிகளில் 202 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிலும், இந்த எண்ணிக்கையை எட்ட 187 இன்னிங்க்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் ரோஹித். இதன் மூலம் குறைந்த இன்னிங்க்ஸ்களில் 200 சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை செய்துள்ளார்.

அப்ரிடி சாதனை முறியடிப்பு

அப்ரிடி சாதனை முறியடிப்பு

பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி 200 சிக்ஸர்களை தாண்ட 195 இன்னிங்க்ஸ்கள் எடுத்துக் கொண்டதே முன்பு சாதனையாக இருந்தது. அதை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

தோனியை முந்த 17 தேவை

தோனியை முந்த 17 தேவை

தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் ஆறாவது இடத்தில் இருக்கிறார். மேலும், இதுவரை ஏழு வீரர்கள் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். இந்தியாவில் தோனி மட்டுமே ரோஹித்தை விட அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார். தோனி 218 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோஹித் தற்போது 202 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் 17 சிக்ஸர்கள் அடித்தால் தோனியை முந்தி விடுவார் ரோஹித் சர்மா.

1000 ரன்கள் அடித்த ரோஹித்

1000 ரன்கள் அடித்த ரோஹித்

அது மட்டுமின்றி, நேற்றைய போட்டியில் 63 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா 2018ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார். இந்த பட்டியலில் இவருக்கு முன்னால் கோலி மட்டுமே இருக்கிறார். அவர் 1202 ரன்கள் அடித்துள்ளார்.

Story first published: Friday, November 2, 2018, 14:29 [IST]
Other articles published on Nov 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+