Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸை இழந்ததால் சாதகம் தான்..வரலாறு அப்படி.. ரோகித் வீரர்களுக்கு சொன்ன அறிவுரை.. சமாளிக்குமா இந்தியா

டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்தது குறித்து கவலைப்பட தேவையில்லை என சக அணி வீரர்களுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய ஆடுதளங்களில் எப்போதும் கடைசி இன்னிங்ஸில் ரன்களை சேஸ் செய்வது மிகவும் கடினமாகும்.

அதிலும் ஆஸ்திரேலியா அணி இம்முறை மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கியுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் சற்று ரன் குவிக்க தடுமாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பாதிக்காது

பாதிக்காது

இந்த நிலையில் டாஸ் இழந்தது குறித்து பேசிய ரோஹித் சர்மா நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். இந்த ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் உள்ளது. ஆனால் கடந்த ஆட்டத்திலும் இதேபோல் டாசை இழந்தோம். நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது என நான் நினைக்கிறேன்.

அறிவுரை

அறிவுரை

டாசை பற்றி எல்லாம் மறந்து விடுங்கள். நீங்கள் களத்திற்கு வந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடினாலே ரன்கள் தானாக வரும். இதை தான் நான் வீரர்களுக்கு அறிவுரையாக கூறினேன். புஜாரா நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவருக்காக நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.

புஜாராவுக்கு பாராட்டு

புஜாராவுக்கு பாராட்டு

புஜாரா குடும்பத்தினரும் இங்கு இருக்கிறார்கள். நூறு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. புஜாரா கிரிக்கெட் வாழ்க்கையில் பல உயர்வு மற்றும் சரிவுகளையும் சந்தித்து இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறோம் என்று ரோகித் சர்மா கூறினார்.இந்திய அணி டாசை இழந்தாலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது.

 சாதகம்

சாதகம்

பொதுவாக இந்திய ஆடுகளங்களில் கடைசி இன்னிங்சில் விளையாடுவது கடினமாக இருந்தாலும், எதிர்பார்த்தது போல் ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் அந்த அளவு குறைவாக இல்லை. மேலும் இந்திய அணி டெல்லி டெஸ்டில் இரண்டாவது முறையாக பேட்டிங் செய்த போது தான் 13 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் டாஸ் இழந்தது இந்திய அணிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் போல் 200 ரன்களுக்கு சுருட்டினால் இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக இருக்கும்.

Story first published: Friday, February 17, 2023, 13:14 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+