For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரகானே, ரோகித் சர்மாவுக்கு அர்ஜூனா விருது வழங்கி கெளரவிப்பு !

By Karthikeyan

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரகானே, ரோகித் சர்மா ஆகியோருக்கு அர்ஜூனா விருதை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் வழங்கினார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதாக கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ரகானே மற்றும் ரோகித் சர்மாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு சிறப்பாக விளையாடியதற்காக ரோகித் சர்மாவிற்கு மத்திய அரசு அர்ஜூனா விருது அறிவித்து பெருமைப்படுத்தியது. அதேபோல் இந்த ஆண்டு ரகானேவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

ஆனால், இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்ததால் குடிகையால் விருதை வாங்க முடியாமல் போனது. தற்போது இந்தியா திரும்பிய இவர்கள் இருவருக்கும் இன்று டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் அர்ஜூனா விருதுகளை வழங்கினார்.

Rohit Sharma, Ajinkya Rahane receive Arjuna Awards

அர்ஜூனா விருதை வழங்கிய கோயல் ''இந்தியாவின் முன்னணி விளையாட்டாக கிரிக்கெட் விளங்கி வருவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதேவேளையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்ற விளையாட்டுக்களையும் ஊக்குவிக்க உறுதிபூண்டுள்ளது'' என்றார்.

Story first published: Saturday, September 17, 2016, 3:24 [IST]
Other articles published on Sep 17, 2016
English summary
Sports Minister Vijay Goel gave away Arjuna Awards to cricketers Rohit Sharma and Ajinkya Rahane at a function held at Jawaharlal Nehru Stadium here on Friday (September 16).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+