For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி அவுட்.. அடுத்து ரோஹித் சர்மா, தவானையும் கழட்டி விட சூப்பர் திட்டம் தயார்!

மும்பை : இந்திய அணியில் இருந்து தோனி தானாகவே விலகத் துவங்கி இருக்கும் நிலையில், அடுத்து மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவானையும் கட்டம் கட்டும் வேலை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், அரையிறுதிப் போட்டியுடன் தோல்வி அடைந்து வெளியேறியது.

அதனால், இப்போது இருந்தே 2023 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் செய்யும் திட்டங்களை பற்றி இந்திய அணி நிர்வாகம் சிந்திக்கத் துவங்கி உள்ளது.

அடுத்த கட்ட திட்டம்

அடுத்த கட்ட திட்டம்

குறிப்பாக, அடுத்த கட்ட திட்டமாக இளம் வீரர்களை அடையாளம் காணும் பணி அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடர் முதலே துவங்க உள்ளது. பல இளம் வீரர்கள் இந்த தொடரில் வாய்ப்பு பெறுவார்கள் என கூறப்படுகிறது.

தோனி இனி இல்லை

தோனி இனி இல்லை

தோனி உலகக்கோப்பைக்கு பின் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் பங்கேற்கவில்லை என பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். அவர் அணியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்கிறது பிசிசிஐ வட்டாரம்.

ரோஹித் - தவானுக்கு செக்

ரோஹித் - தவானுக்கு செக்

தோனிக்கு அடுத்து இந்திய அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் தான். அவர்கள் இருவருக்கும் "செக்மேட்" வைக்க கேப்டன் கோலி தயாராகி வருகிறார் என்பது நம்ப முடியாத தகவலாக உள்ளது.

ஓரங்கட்ட முயற்சிகள்

ஓரங்கட்ட முயற்சிகள்

இனி வரும் நாட்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறி கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் இருவரையும் ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அதற்கு இந்திய அணி நிர்வாகம் சொல்லப் போகும் காரணமும் பலரும் ஒப்புக் கொள்ளும்படி இருக்கும் என்பது தான் இதில் வேடிக்கை.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்தியா அடுத்து 2023 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து தவானுக்கு 37 வயதாகி விடும், ரோஹித் சர்மாவுக்கு 36 வயதாகி இருக்கும். அதனால், அவர்களால் அப்போது முழு திறனுடன் செயல்பட முடியுமா? என்ற சந்தேகமே அவர்களை கட்டம் கட்ட காரணமாக கூறப்படும் என்கிறார்கள். கேப்டன் கோலிக்கு அப்போது 34 வயது ஆகி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேப்டன் போட்டி காரணமா?

கேப்டன் போட்டி காரணமா?

ஆனால், இந்த திட்டத்துக்கு பின்னால் ரோஹித் சர்மா - கோலி இடையே இருக்கும் கேப்டன் போட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது. 2019 உலகக்கோப்பை தொடர் முடிந்த போதே கேப்டன் கோலியை நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு பதிலடியாக கோலி இப்படி ஒரு திட்டத்தை கையில் எடுத்து இருக்கலாம்.

Story first published: Sunday, July 21, 2019, 14:40 [IST]
Other articles published on Jul 21, 2019
English summary
Rohit Sharma and Dhawan may lose their spot in team in coming years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X