Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவின் அதிரடி.. திணறிய இங்கி, வீரர்கள்.. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது எப்படி?

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடர் இன்று லண்டன் ஓவல் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் டக் அவுட்டும், ஜானி பேர்ஸ்டோ 7 ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதன்பின்னர் வந்த ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்கு திரும்பினர்.

 ஏமாந்த இங்கிலாந்து

ஏமாந்த இங்கிலாந்து

டாப் ஆர்டர் அனைவரும் சொதப்ப, ஜாஸ் பட்லர் மட்டும் 32 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காததால் 25.2 ஓவர்களுக்குள் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 7.2 ஓவர்களை வீசி 6 விக்கெட்களை கைப்பற்றினார். இங்கிலாந்து மண்ணில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்களை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

ஓவல் மைதான பிட்ச்-ல் நல்ல ஸ்விங் இருந்ததால் இந்திய அணியும் விக்கெட்களை இழந்து தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை ரோகித் - தவான் ஜோடி மாற்றி அமைத்தனர். ரோகித் சர்மா ஒருபுறம் அதிரடியாக ரன்களை குவிக்க, ஷிகர் தவான் நிதானமாக அவருக்கு பார்ட்னஷிப் கொடுத்தார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 18.4 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 114 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்களும், ஷிகர் தவான் 54 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Tuesday, July 12, 2022, 21:58 [IST]
Other articles published on Jul 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+