Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ரோகித் சதம்.. சுப்மான் கில் சாதனை.. நியூசி வீரர்களை கதறவிட்ட இந்தியா

இந்தூர் : நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் சதம் விளாசினர்.

இந்தூரில் நடைபெற்ற பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது.

மைதானத்தின் ஒரு பகுதி 53 மீட்டர் தான் பவுண்டரி லைனில் இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் பெரிய ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா களமிறங்கியது.

ரோகித் வெறி

ரோகித் வெறி

கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில சதம் விளாசினார். இதனையடுத்து 51 இன்னிங்ஸ்களாக ரோகித் சதம் இடிக்கவில்லை. இந்த தொடரில் கூட ரோகித் அதிரடியாக ஆடினாலும், சதத்தை தொடவில்லை. இதனால், சதம் அடிக்க வேண்டிய வெறியுடன் ரோகித் விளையாடினார்.

அடுத்தடுத்து அரைசதம்

அடுத்தடுத்து அரைசதம்

முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் , சுப்மான் கில் ஜோடி பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். முதல் 10 ஓவரிலேயே இந்திய அணி 82 ரன்கள குவித்தது. சுப்மான் கில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 33 பந்துகளில் எல்லாம் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் ரோகித் 41 பந்தில் 50 ரன்களை பூர்த்தி செய்தார்.

ரோகித் சதம்

ரோகித் சதம்

தொடர்ந்து அதிரடியை காட்டிய இந்த ஜோடி, கிடைக்கும் வாய்ப்பை பவுண்டரிக்கு விரட்டினார். ரோகித் சர்மா 6 சிக்சர்கள், 9 பவுண்டரிகளை விளாசி 83 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 16 மாதங்களுக்கு பிறகு சதத்தை பூர்த்தி செய்தார்.

சுப்மான் கில் சாதனை

சுப்மான் கில் சாதனை

எனினும் ரோகித் 101 ரன்னில் பிராஸ்வெல் பந்தில் சதம் போல்ட் ஆனார். எனினும் சுப்மான் கில் அதிரடியை காட்டி 72 பந்தில் சதம் விளாசினார்.இதில் 13 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சுப்மான் கில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 360 ரன்களில் விளாசி, அதிக ரன்கள் குவித்த பாபர் அசாமின் சாதனையை அவர் சமன் செய்தார்.

Story first published: Tuesday, January 24, 2023, 16:04 [IST]
Other articles published on Jan 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+