
எப்படி
கடந்த 6 டெஸ்ட் போட்டிகளாக இந்திய அணி சரியான ஓப்பனிங் இணை இல்லாமல் ஆடி வந்தது. ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியில் சரியான ஓப்பனிங் இல்லை. மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, ராகுல் என்று டெஸ்ட் ஓப்பனிங்கில் பலரை இறக்கி இந்திய அணி சோதனை செய்தது.

மோசம்
ஆனால் எந்த ஜோடியும் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்துள்ளது. ரோஹித் சர்மா - சுப்மான் கில் ஜோடி மிக சிறப்பான தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்துள்ளனர்.

ஜோடி
அதிலும் ரோஹித் சர்மா - சுப்மான் கில் ஜோடிதான் கடந்த 2010க்கு பின் ஆசியாவிற்கு வெளியே இந்தியாவிற்காக 20+ ஓவர்களை டெஸ்ட் போட்டியில் அவுட்டாகாமல் ஆடிய ஓப்பனிங் ஜோடி ஆகும். வேறு எந்த ஜோடியும் இந்த சிறப்பை பெறவில்லை. அதேபோல் கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடி 50+ ரன்களை எடுக்கவில்லை.

சிறப்பாக அமைந்துள்ளது
ஆனால் ரோஹித் சர்மா - சுப்மான் கில் ஜோடிதான் 70+ ரன்களை ஓப்பனிங் இணையாக இறங்கி அடித்துள்ளனர்.இதன் மூலம் இந்திய அணி சிறப்பான ஓப்பனிங் இணையை கண்டுபிடித்து உள்ளது என்றுதான் கூற வேண்டும். நீண்ட தேடலுக்கு பின் இந்திய அணியின் ஓப்பனிங் ஒருவழியாக நன்றாக ஆட தொடங்கி உள்ளது. வரும் போட்டிகளில் இவர்கள் இருவரும் இந்திய அணியின் ஒப்பனர்களாக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications