Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2027 உலகக்கோப்பையில் ரோஹித் - வைபவ் சூர்யவன்ஷி ஓப்பனிங்? ஃபரூக் இன்ஜினியர் சொன்ன மாஸ் திட்டம்!

மும்பை: 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவுடன் இணைந்து வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியர் யோசனை தெரிவித்துள்ளார். இந்திய டி20 கிரிக்கெட்டில் கால் பதித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இது குறித்து பேட்டி அளித்த முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் ஃபரூக் இன்ஜினியர், 2027 உலகக்கோப்பையில் ரோஹித்துடன் வைபவ் ஓப்பனிங் செய்ய வேண்டும் என்றார். மேலும், "இடது-வலது பேட்டிங் ஜோடி எப்போதும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக இருக்கும். ஒருவேளை ரோஹித் உலகக்கோப்பையில் விளையாடினால், அவர் வைபவ் உடன் தொடக்க வீரராகக் களமிறங்க வேண்டும். விராட் கோலி 3வது இடத்திலும், தற்போது ஓப்பனராக இருக்கும் சுப்மன் கில் 4வது இடத்திலும் களமிறங்கினால் பேட்டிங் வரிசை மேலும் வலுவாக மாறும்" எனத் தெரிவித்தார்.

Rohit Sharma and Vaibhav Suryavanshi opening in 2027 ODI World Cup Farokh Engineer s bold plan

சுப்மன் கில் குறித்துப் பேசிய அவர், "சுப்மன் கில் தற்போதைய இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்டர். அவர் பந்துகளை சிக்ஸருக்குத் தூக்கியடிப்பதை விட தரையோடு தட்டி ஆடுவதில் வல்லவர். எனவே அவர் 4வது இடத்தில் விளையாடுவது தான் சரியாக இருக்கும். வைபவ் சூர்யவன்ஷி பவர்பிளேயில் இடைவெளிகளைக் கண்டறிந்து பவுண்டரிகளை விளாசக் கூடியவர். அவர் கொடுக்கும் அதிரடி தொடக்கம், நடுவரிசை பேட்டர்களுக்கு இன்னிங்ஸை நிதானமாக கட்டமைக்கப் போதிய நேரத்தைக் கொடுக்கும்" என்று ஃபரூக் இன்ஜினியர் ஆலோசனை கூறி இருக்கிறார்.

தற்போது வரை வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச டி20 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் 193 ரன்களை 189.21 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடி 43.38 சராசரியுடன் 176.80 ஸ்ட்ரைக் ரேட்டில் 564 ரன்கள் சேர்த்துள்ளார். 15 வயது சிறுவனை அதற்குள் 50 ஓவர் கிரிக்கெட்டுக்குள் கொண்டு வர வேண்டுமா? என்ற கேள்வி உள்ள நிலையில் அது குறித்தும் ஃபரூக் இன்ஜினியர் விளக்கம் அளித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி அடுத்து எப்போது இந்திய அணிக்காக விளையாடுவார்? இன்னும் எத்தனை மாதம் ஆகும்?

வைபவ் சூர்யவன்ஷி அடுத்து எப்போது இந்திய அணிக்காக விளையாடுவார்? இன்னும் எத்தனை மாதம் ஆகும்?

"டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டைப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. வைபவை இப்போதே ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்க இதுவே சரியான நேரம்" என்று ஃபரூக் இன்ஜினியர் பதில் அளித்தார்.

பிசிசிஐ-க்கு சூர்யகுமார் யாதவ் அனுப்பிய மெசேஜ்..

பிசிசிஐ-க்கு சூர்யகுமார் யாதவ் அனுப்பிய மெசேஜ்.. "ஞாயிறு ஜாலி.. 3 மணி நேரம்.. 1000 பந்துகள்"
Story first published: Monday, July 27, 2026, 12:27 [IST]
Other articles published on Jul 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+