Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா மட்டுமல்ல.. விராட் கோலியும் 3வது போட்டியுடன் ஓய்வு பெறுவார்.. பாக்.வீரர் தடாலடி கணிப்பு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றால் அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெற்று விடுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து கடும் விவாதங்கள் எழுந்து வருகிறது. ரோகித் சர்மாவை ஓய்வு பெற வைக்க இந்திய அணி நிர்வாகம் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Virat Kohli Rohit

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, ரோஹித் சர்மா தொடர்ந்து நன்றாக விளையாடினால் அவரை அணியில் வைத்திருக்க வேண்டும். தற்போது வெறும் இரண்டு போட்டியை பார்த்து அவருடைய திறனைக் குறித்து நீங்கள் கணிக்கக் கூடாது. கம்பீர் என்ன நினைக்கிறார், நினைக்கவில்லை என்பதை பொறுத்து இந்த முடிவை எடுக்கக் கூடாது.

ரோகித் சர்மா பெயரையே குறிப்பிடவில்லை.. இனி அவ்வளவு தான்.. சடகோபன் ரமேஷ் கருத்து

ரோகித் சர்மா பெயரையே குறிப்பிடவில்லை.. இனி அவ்வளவு தான்.. சடகோபன் ரமேஷ் கருத்து

ஒருவேளை ரோகித் சர்மாவை நீங்கள் அணியிலிருந்து நீக்கினால் விராட் கோலி பற்றியும் நீங்கள் நினைக்க வேண்டும். இன்று ரோகித் சர்மாவுக்கு இது நடந்தால், அடுத்த முறை நிச்சயமாக விராட் கோலிக்கும் நடக்கும். ஏனென்றால் விராட் கோலி மற்றும் ரோகித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விதத்தை பார்த்தாலே நமக்கு இது தெரியும்.

என்னை கேட்டால் இந்த இரண்டு ஜாம்பவான் வீரர்களும் லார்ட்ஸ் ஒரு நாள் போட்டியில் ஒன்றாக ஓய்வு பெறும் வாய்ப்பு இருக்கின்றது. ஏனென்றால் இவ்வளவு அழுத்தத்தை நீங்கள் செலுத்தினால் நிச்சயம் இருவரும் விளையாடிய வரை போதும் என்ற முடிவை எடுக்கக்கூடும். அது நிச்சயம் தவறான ஒரு முடிவு.

இவர் எல்லாம் பேட்டிங் வரும் முன்பே அவுட் ஆகிவிடுவார்.. இது எல்லாம் ஒரு நடுவரிசையா? ஸ்ரீகாந்த் சாடல்

இவர் எல்லாம் பேட்டிங் வரும் முன்பே அவுட் ஆகிவிடுவார்.. இது எல்லாம் ஒரு நடுவரிசையா? ஸ்ரீகாந்த் சாடல்

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே விராட் கோலி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறது என்று பாசித் அலி தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா ஒரு வேலை ஓய்வு பெற்று விட்டால், அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாட வைக்க அஜித் அகார்கர்- கம்பீர் ஜோடி முடிவெடுத்திருக்கிறது

Story first published: Friday, July 17, 2026, 19:48 [IST]
Other articles published on Jul 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+