Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் இந்திய அணி மாற்றம்.. ஸ்டார் வீரர்கள் விலகல்.. டாஸ் வென்ற வெ.இ பந்துவீச்சு

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா விலகியதன் காரணமாக, ஹர்திக் பாண்டியா கேப்டனாக களமிறங்கியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுமோசமாக விளையாடி 114 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியும் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.

 Rohit Sharma and Virat Kohli rested for the Second ODI against West Indies

ஆடுகளம் மிகவும் மோசமான வகையில் அமைக்கப்பட்டதாக இரு அணி கேப்டன்களும் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியும் பார்படாஸ் மைதானத்திலேயே நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக விலகியுள்ளனர்.

இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தவுள்ளார். இந்த நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஷாய் ஹோப் பேசுகையில், இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இன்னும் இரு போட்டிகள் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால், 3வது போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். எங்களில் அணியில் ட்ரேக்ஸ் மற்றும் பவல் நீக்கப்பட்டு அல்ஜாரி ஜோசப் மற்றும் கேசி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விரும்பிவோம். இந்த ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியும் என்பதை பார்க்க விரும்புகிறோம். ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதனால் இந்த போட்டியில் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தோம். அதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் போட்டியில் அக்சர் படேல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, July 29, 2023, 18:53 [IST]
Other articles published on Jul 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+