For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு.. பெரும் ரிஸ்க் எடுத்த பிசிசிஐ.. வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை!!

மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் புதிய கேப்டன் யார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணியுடன் மோதுகிறது.

இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது.

கேப்டன்சி பிரச்சினை

கேப்டன்சி பிரச்சினை

இதற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்பதையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இன்று மதியம் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ரோகித் சர்மா, கே.எல்.ராகு,, ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் இதற்காக நீண்ட நேரமாக அலோசிக்கப்பட்டு வந்தன.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

இந்நிலையில் இறுதியில் ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக உள்ள ரோகித்திற்கு இந்த கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படவுள்ளார்.

வல்லுநர்கள் அதிருப்தி

வல்லுநர்கள் அதிருப்தி

ஒருபுறம் இதற்கு பாரட்டுக்கள் குவிந்து வந்தாலும், மற்றொரு புறம் பெரும் ரிஸ்க்-காக பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. டெஸ்ட் போன்ற நீண்ட தொடர்களில் விளையாடும் போது அவரின் உடற்தகுதி அடிக்கடி சரியில்லாமல் போவதால் தொடரில் இருந்து வெளியேறிவிடுகிறார். இப்படிபட்ட வீரரை நம்பி எப்படி டெஸ்ட் அணியை எப்படி கொடுத்துள்ளீர்கள் என முன்னாள் வீரர்கள் விளாசி வருகின்றனர்.

புதுவித அணி

புதுவித அணி

இவர் கேப்டன்சி செய்யப்போகும் இலங்கை தொடருக்கான அணி முற்றிலும் வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதே போல கே.எல்.ராகுலும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி

ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், ப்ரியங் பன்சால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எஸ்.பரத். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், சௌரப் குமார்

Story first published: Saturday, February 19, 2022, 16:48 [IST]
Other articles published on Feb 19, 2022
English summary
BCCI Announces Rohit sharma is the India's new test captain, takes a huge risk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+