
கடும் தாக்கு
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 3வது வீரராக விளையாடிய தீபக் ஹூடா அதிரடியாக ரன் சேர்த்த நிலையில், அவர் நீக்கப்பட்டு விராட் கோலி அணியில் சேர்க்கப்பட்டது விமர்சனத்துக்கு ஆளானத. இதில் கோலி 1 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே, போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, வெளியே நடக்கும் சத்தங்களை நாங்கள் கேட்பதில்லை. அதனால் எங்களுக்கு அது ஒரு பிரச்சினையே இல்லை.

ரோகித் கேள்வி
கிரிக்கெட் நிபுணர்கள் என்று யாரை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எதற்கு அவர்களை நிபுணர்கள் என்று கூறுகிறார்கள். நிபுணர்கள் எல்லாம் வெளியில் இருந்து தான் அணியை பார்க்கிறார்கள். அணிக்குள் என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு என்ன தெரியும். அணியை கட்டமைக்க நாங்கள் தெரிந்தே தான் சில முடிவுகளை எடுக்கிறோம். அதற்கு பின்னால் சில காரணங்கள் உள்ளன. அதை பற்றி ஏதும் தெரியாமல் எப்படி கருத்து கூறலாம்.

கோலி ஃபார்ம்
விராட் கோலி ஃபார்ம் குறித்து எதற்கு பேசுகிறீர்கள். ஒரு வீரருக்கு ஃபார்ம் என்பது மேலே ஏறும், இறங்கும். ஃபார்மை விட வீரரின் தரம் தான் முக்கியம். நாங்கள் வீரரின் தரத்தை தான் பார்க்கிறோம். ஒரு வீரர் குறித்து விமர்சிக்கும் போது அவருடைய தரத்தையும், திறமையையும் பார்த்து விமர்சனம் செய்யுங்கள். ஒரு வீரர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடும் போது ஒரு தொடரை வைத்தோ, இல்லை ஒரு சில மாதங்களை வைத்தோ முடிவு எடுக்க கூடாது. ஃபார்ம் மாறிக்கிட்டே இருக்கும். அது எனக்கும் நடந்துள்ளது.

ரோகித் பதிலடி
விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழக்கிறார் என்ற விமர்சனத்துக்கு பதில் அளித்த ரோகித், நாங்கள் ஒரு சிலர் இப்படி ஆட வேண்டும் என்று கூறுகிறோம். அதற்கு ஏற்ப அவர்கள் விளையாடுகிறார்கள். அணி சொல்லும் பணிக்கு தங்களது ஸ்டைலை மாற்றி கொள்ள சில காலம் தேவைப்படும். சில வீரர்கள் கூடுதல் ரிக்ஸ் எடுத்து விளையாடுகிறார்கள்.ஒருநாள் தொடரை பொறுத்தவரை டி20 போட்டியின் அடுத்த வெர்சன் தான், தவறுகளிலிருந்து பாட்ங்களை கற்று கொண்டு விளையாடுகிறோம்.


Click it and Unblock the Notifications











