Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே புஜாரா இல்ல... ரோகித் சர்மாதான்... பிசிசிஐ திட்டவட்டமா அறிவிச்சாச்சு!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கவுள்ளது.

இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் அன்றைய தினம் மோதவுள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவை துணை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

சமநிலையில் அணிகள்

சமநிலையில் அணிகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது.

புஜாரா துணை கேப்டன்

புஜாரா துணை கேப்டன்

குறிப்பாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோலி இல்லாத இந்த போட்டியில் கேப்டனாக ரஹானேவும் சத்தீஸ்வர் புஜாரா துணை கேப்டனாகவும் செயல்பட்டனர்.

ரோகித் சர்மா துணை கேப்டன்

ரோகித் சர்மா துணை கேப்டன்

இந்திய குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளநிலையில் அந்த போட்டிகளின் துணை கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ரோகித் துணை கேப்டன்

ரோகித் துணை கேப்டன்

இந்த இரு போட்டிகளிலும் அஜிங்க்யா ரஹானேவே கேப்டனாக செயல்பட உள்ள நிலையில், புஜாராவிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு தற்போது ரோகித் சர்மாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. என்சிஏவில் தனது பிட்னசை நிரூபித்த ரோகித் சர்மா சிட்னியில் குவாரன்டைனை முடித்துவிட்டு கடந்த புதன்கிழமை அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் பலம்

கூடுதல் பலம்

இரண்டாவது போட்டியில், கோலி, ஷமி, இஷாந்த் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத அணியை ரஹானே வழிநடத்தி சிறப்பான வெற்றிக்கு வழிவகுத்தார். மேலும் தற்போது அணியில் ரோகித் சர்மா இணைந்துள்ளது அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

Story first published: Friday, January 1, 2021, 18:26 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+