ரோகித் பேச்சை கேட்காத கோலி! 2019 உலககோப்பை தோற்றதுக்கு காரணமே இதான்.. தோனியை வேஸ்ட் பண்ணிட்டாங்க!
மும்பை : இந்திய அணி 50 ஒவர் உலகக் கோப்பையை 2019 ஆம் ஆண்டு வென்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். விராட் கோலி தலைமையில் அனுபவமும் இளமையும் கலந்து பலமான அணியாக இந்தியா விளங்கியதால் உலகக்கோப்பை நிச்சயம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியது, விராட் கோலியின் கேப்டன்சி போன்ற பல சிக்கல்கள் காரணமாக இந்தியா கொஞ்சம் தடுமாறியது. எனினும் அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 240 ரன்கள் என்று இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் கே எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன்களில் ஆட்டம் இழக்க தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் மட்டும்தான் எடுத்திருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 92 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனை எடுத்து ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி, ஜடேஜா பொறுப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. ஆனால் தோனி 50 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.
இதன் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு அப்போது அணியில் சாதாரண வீரராக இருந்த ரோகித் சர்மா பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ரோகித் சர்மா பேசியதாவது, தனிப்பட்ட முறையில் நான் தோனி பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இதன் மூலம் நடுவரிசை பலமாக அமையும். அனுபவிக்க வீரர் நடுவரிசையில் இருக்கும்போது பெரிய சிக்கல் இருக்காது. எனினும் கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இந்த முடிவை எடுக்க வேண்டும். தோனி பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் களமிறங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவை தற்போது பதிவிட்டுள்ள ரசிகர்கள் 2019 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு காரணமே தவறான கேப்டன்சி தான் என்றும் ரோகித் சர்மா அப்போது கேப்டனாகி இருந்திருக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 648 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். இதில் அவர் ஐந்து சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications