
சிக்ஸர் மன்னன் ரோஹித்
சிக்ஸ் அடிப்பதில் இந்திய அணியில் இதுவரை சிறந்த வீரர் ரோஹித் சர்மா தான். இதை பல முறை ரோஹித் நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் சிக்ஸர் அடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் ரோஹித்.

89 சிக்ஸர்கள் அடித்த ரோஹித்
அந்த இரண்டு சிக்ஸர்கள் மூலம் கிறிஸ் கெயில் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார் ரோஹித். ஆஸி. அணிக்கு எதிராக மட்டும் 89 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித். இதன் மூலம், ஒரே அணிக்கு எதிராக அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனை செய்துள்ளார் ரோஹித் சர்மா.

கிறிஸ் கெயில் சாதனை முறியடிப்பு
முன்பு கிறிஸ் கெயில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்ஸர்கள் அடித்து இருந்ததே அதிகமாக இருந்தது. அதை முறியடித்துள்ள இந்தியாவின் ரோஹித் சர்மா, 89 சிக்ஸர்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ரோஹித் 210 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் 210 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. தோனியை முந்தி நான்காம் இடத்தை பிடிக்க ரோஹித்துக்கு இன்னும் 10 சிக்ஸர்கள் தேவை.


Click it and Unblock the Notifications