Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிவேகமாக 2,000 ரன்கள்: கங்குலி, கோஹ்லி சாதனைகளை முறியடித்த ரோகித் சர்மா!

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 125 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா, கங்குலி மற்றும் கோஹ்லியின் அதிவேகமாக 2,000 ரன்கள் குவிப்பு சாதனையை முறியடித்திருக்கிறார்.

நாக்பூரில் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 125 ரன்கள் குவிப்பு

ரோகித் சர்மா 125 ரன்கள் குவிப்பு

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 109 பந்துகளில் 125 ரன்களைக் குவித்தார். நேற்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

42 இன்னிங்ஸில் 2,000 ரன்கள்

42 இன்னிங்ஸில் 2,000 ரன்கள்

இந்திய அணியில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமைக்குரியவராகியிருக்கிறார் ரோகித். அதாவது 42 இன்னிங்ஸில் 2,000 ரன்களைக் கடந்திருக்கிறார் ரோகித் சர்மா. முன்னர் கங்குலி 45, கோஹ்லி 46 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களைக் கடந்திருந்தனர்.

இந்தியாவின் 9-வது வீரர்

இந்தியாவின் 9-வது வீரர்

இப்போட்டியில் மொத்தம் 6,000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா. 6,000 ரன்களைக் கடந்த இந்திய அணியின் 9-வது வீரர் ரோகித் சர்மா.

ஆஸிக்கு எதிராக 6வது சதம்

ஆஸிக்கு எதிராக 6வது சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா அடித்திருப்பது 6-வது சதமாகும். இந்த ஆண்டில் அதிக அளவில் 29 சிக்சர்களை விளாசியவர் ரோகித் சர்மா.

Story first published: Monday, October 2, 2017, 11:15 [IST]
Other articles published on Oct 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+