Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை முந்திய ரோகித் சர்மா... கேப்டனாக பெரும் ரெக்கார்ட் உடைப்பு.. இவ்வளவு சீக்கிரமாவா?? - விவரம்

சவுத்தாம்டன்: இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பெரும் ரெக்கார்டை ரோகித் சர்மா உடைத்துள்ளார்.

Recommended Video

Virat Kohli 3 மாதம் Break எடுக்க வேண்டும் Michael Vaughan கருத்து *Cricket

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் போட்டியில் பும்ராவின் தலைமையில் தோல்வியடைந்த இந்திய அணி, ரோகித் வந்த பிறகு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

காயத்தில் இருந்து மீண்டு வந்த ரோகித் சர்மா தனது பழைய ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போலவே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 14 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே எடுத்து மொயீன் அலியிடம் சரணடைந்தார்.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இந்நிலையில் குறைவான ஸ்கோரிலும் ரோகித் பெரும் ரெக்கார்டை செய்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டனாக விராட் கோலி கடந்த 2021ல் சாதனை படைத்தார். அதனை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடித்தார். கோலி 30 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த நிலையில் பாபர அசாம் 24 இன்னிங்ஸ்களில் கடந்தார்.

கோலி சாதனை முறியடிப்பு

கோலி சாதனை முறியடிப்பு

ஆனால் தற்போது ரோகித் சர்மா தனது 29வது இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து விராட் கோலியை முந்திவிட்டார். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தையும் பிடித்தார். ரோகித் சர்மாவின் தலைமையில் இதுவரை இந்திய அணி ஒரு டி20 போட்டியில் கூட தோற்றதில்லை. நேற்று பெற்றது தொடர்ச்சியாக பெறும் 13வது வெற்றியாகும்.

 உலகக்கோப்பை சிக்கல்

உலகக்கோப்பை சிக்கல்

35 வயதாகும் ரோகித் சர்மா வரும் நவம்பர் மாதம் வரவுள்ள டி20 உலகக்கோப்பைகாக தயாராகி வருகிறார். அவருக்கான அணியை தீவிரமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை இந்திய அணிக்கு அவர் கோப்பையை வென்றுக்கொடுக்கவில்லை என்றால் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, July 8, 2022, 13:00 [IST]
Other articles published on Jul 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+