Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 போட்டிகளில் கோலியை முந்திய ரோஹித்.. ஒரே சதத்தால் வேகமாக முன்னேறினார்

லக்னோ: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். 61 பந்துகளில் 111 ரன்கள் குவித்த ரோஹித், இந்தியா 195 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார்.

ரோஹித்தின் இந்த டி20 சதம் அவரது நான்காவது டி20 சதமாகும். இந்த சதம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

அதிக சதம் அடித்த ரோஹித்

அதிக சதம் அடித்த ரோஹித்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, நியூசீலாந்தின் கோலின் மன்றோ மற்றும் ரோஹித் இருவரும் மூன்று சதம் அடித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருந்தனர். தற்போது, ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

அதிக ரன்களில் இரண்டாம் இடம்

அதிக ரன்களில் இரண்டாம் இடம்

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 111 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ரோஹித் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச அளவில் மார்டின் குப்டில் 2271 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

கோலியை முந்திய ரோஹித்

கோலியை முந்திய ரோஹித்

இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. முன்னதாக, விராட் கோலி 2102 ரன்கள் குவித்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையுடன் இருந்தார். ரோஹித் கோலியை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

அதிக சிக்ஸர்களில் மூன்றாம் இடம்

அதிக சிக்ஸர்களில் மூன்றாம் இடம்

மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. முதல் இரண்டு இடங்களில் மார்டின் குப்டில் மற்றும் கிறிஸ் கெயில் 103 சிக்ஸர்களோடு இடம் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா 96 சிக்ஸர்களோடு இடம் பிடித்துள்ளார்.

Story first published: Wednesday, November 7, 2018, 11:36 [IST]
Other articles published on Nov 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+