Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவில் 50 சிக்ஸ்கள்... சாதித்து காட்டிய முதல் வெளிநாட்டு வீரர்... ஹிட்மேன் அதிரடி!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 26 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் என அவரது அதிரடி தொடர்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 50 சிக்ஸ்களை அடித்துள்ள முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை இன்றைய போட்டியின் மூலம் அவர் நிறைவேற்றியுள்ளார்.

ரோகித் -கில் பார்ட்னர்ஷிப்

ரோகித் -கில் பார்ட்னர்ஷிப்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 7ம் தேதி முதல் சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கல் ஆகியோர் பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்களை குவித்து நல்ல துவக்கத்தை அளித்துள்ளனர்.

2வது இன்னிங்சில் 52 ரன்கள்

2வது இன்னிங்சில் 52 ரன்கள்

கடந்த முதல் இன்னிங்சில் 26 ரன்களை அடித்த ரோகித் சர்மா, இன்றைய இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களை அடித்து இந்திய அணிக்கு நிலையான துவக்கத்தை அளித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நெட் பயிற்சிகளை தவிர்த்து வேறு பயிற்சிகள் அற்ற நிலையில் இதை சாதித்துள்ளார் ரோகித் சர்மா.

முதல் வெளிநாட்டு வீரர்

முதல் வெளிநாட்டு வீரர்

இந்நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 50 சிக்ஸ்களை அடித்துள்ள முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமை இன்றைய போட்டியின்மூலம் ரோகித் சர்மாவிற்கு கிடைத்துள்ளது. குறைந்த ஓவர்களின் ஹிட்மேனாக பார்க்கப்படும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிட்ட சாதனைகளை மேற்கொள்ளாத நிலையில், தற்போது அதிலும் தனது அதிரடியை நிரூபித்துள்ளார்.

நிதானமான ஆட்டம்

நிதானமான ஆட்டம்

காயம் மற்றும் அதன் காரணமாக தனது பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கடந்த மாதத்தில் தனது பிட்னசை என்சிஏவில் நிரூபித்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்து விளையாடிவரும் ரோகித் சர்மா, தனது நிதானமான மற்றும் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

52 ரன்கள் அடித்த ரோகித்

52 ரன்கள் அடித்த ரோகித்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய இரண்டாவது இன்னிங்சில் முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்த சிக்ஸ்மூலம் அவர் தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் 50 சிக்ஸ்களை அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

Story first published: Sunday, January 10, 2021, 16:40 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+