Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் செய்த முட்டாள் தனம்.. தோனியாக இருந்தால் கதையே வேற.. ஜெயிக்க வேண்டிய மேட்ச்ங்க இது

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரோகித் சர்மாவின் முட்டாள் தனமான கேப்டன்சி தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடிலெய்ட் மைதானம் என்பதால், இந்திய ஆடுகளங்களுக்கு ஓப்பான மைதானம் ஆகும். ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றால், அது இங்கு தான்.

அப்படி இருக்க, ரோகித் சர்மா, தவறான கொள்கை முடிவால், இன்று இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

அடிலெய்ட் மைதானத்தில் ஸ்விங் பந்துவீச்சு எடுப்படாது என்ற நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டோம். ஆனால் இந்தியா பிளேயிங் லெவனில் சேர்த்தது புவனேஸ்வர் குமார், ஆர்ஸ்தீப் சிங் என்ற 2 ஸ்விங் பவுலரை தான். அதற்கு பதில், Leg spinner ரோகித் சேர்த்து இருந்தால் ஒரு அளவாது பலன் கிடைத்திருக்கும்.

2 வீரர்கள்

2 வீரர்கள்

அக்சர் பட்டேலுக்கு பதில் சாஹலையும், புவனேஸ்வர் குமாருக்கு பதில் ஹர்சல் பட்டேலையும் இந்திய அணியில் ரோகித் சேர்த்திருக்க வேண்டும். இங்கிலாந்து அணியில் Wrist ஸ்ப்பின்னர் ஆதில் ரஷித் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதே போல் ரோகித், சாஹலுக்கு ஜிம்பாப்வே போட்டியிலேயே வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.

பிளானே தவறு

பிளானே தவறு

முகமது சிராஜ், குல்தீப் சென், உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களையும் டி20 உலககோப்பைக்காக ரோகித் சர்மா தயார்படுத்திருக்க வேண்டும். இதே போன்று, முக்கிய ஆட்டத்தில் ராகுல் சொதப்புகிறார் என்று எல்கேஜி குழந்தையை கேட்டால் கூட சொல்லும். அப்படிப்பட்டவருக்கு வாய்ப்பு வாங்குபவர்களுக்கு பதில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோரை அணியில் சேர்த்திருக்க ரோகித் முடிவு எடுத்திருக்க வேண்டும்.

கிங் தோனி

கிங் தோனி

நாம் எந்த மாதிரி ஆடுகளத்தில் விளையாட போகிறோம். எப்படி ஆட்டத்தை கட்டமைக்க வேண்டும், யாரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று தோனி முடிவு எடுப்பது போல் ரோகித் செய்ய தவறிவிட்டார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தோனிக்கு கிடைத்தால், அவருடைய கேப்டன்ஷிப்பே வேறு மாதிரி இருக்கும் என்று ஹர்ஷா போக்லே பலமுறை பாராட்டி இருக்கிறார். ஆனால், இப்போதுள்ள கேப்டன்கள் எல்லாம் சுத்த வேஸ்ட் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Story first published: Thursday, November 10, 2022, 20:51 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+