Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற லெவன் கேப்டன்ஷி இது.. காய்களை சரியாக நகர்த்திய ரோகித்.. இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா களத்தில் அபாரமாக செயல்பட்டார்.

Recommended Video

IND vs ENG 2nd ODI England அணி அபார வெற்றி *Cricket

முதல் போட்டியை போல், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை. இதனால் இந்தியா கொஞ்சம் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரோகித் சர்மா, பந்துவீச்சாளர்களை சிறப்பாக சுழற்சி முறையில் மாற்றி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்தார்.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பாரிஸ்டோ, முதல் விக்கெட்டுக்கு பொறுமையாக விளையாடினர். முகமது ஷமி மற்றும் பும்ரா பந்துவீச்சை நெருக்கடி இன்றி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் சேர்த்தனர். முதல் 8 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை சேர்த்தது.

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சு மாற்றம்

இந்த ஜோடியை அப்படியே விட்டால் சரி வராது என்பதை உணர்ந்த ரோகித் சர்மா, உடனே ஹர்திக் பாண்டியாவை ஓவர் வீச அழைத்தார். இதில் ஹ்ர்திக்கின் முதல் ஓவரிலே விக்கெட் வீழ்ந்தது. ஜேசன் ராய் 23 ரன்களில் அவுட்டானார். ஆட்டத்தில் சாஹல் தனது முதல் விக்கெட்டை எடுத்திருக்க, ஜடேஜாவிடம் போகாமல் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லருக்காக ஷமியை இரண்டாவது ஸ்பெல்லிற்கு ரோகித் சர்மா கொண்டுவந்தார்.

அட்டாக்கிங் கேப்டன்ஷி

அட்டாக்கிங் கேப்டன்ஷி

இந்த அட்டாக்கிங் மூவ்வால் பட்லர் விக்கெட்டை இந்தியா பறித்தது. இதே போன்று 23வது ஓவரில் பும்ராவை இரண்டாவது ஸ்பெல்லிற்கு கொண்டு வந்து நெருக்கடி அளித்த ரோகித், சாஹைலை வைத்து இங்கிலாந்துக்கு போட்ட பிடியை தளர்த்தாமல் ஆட்டத்தை நகர்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாறியது.

தடுமாறிய இங்கிலாந்து

தடுமாறிய இங்கிலாந்து

இதனால் இங்கிலாந்து அணி 148 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து டேவிட் வில்லி மற்றும் மொயின் அலி ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதன் மூலம் 49வது ஓவரில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரோகித் சர்மாவின் பந்துவீச்சு மூவ் சிறப்பாக விருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் வரவேற்றனர்

Story first published: Thursday, July 14, 2022, 22:16 [IST]
Other articles published on Jul 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+