Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

50 இன்னிங்ஸ் மேல் ஆச்சு.. எப்போ சார் அடிப்பீங்க.. கவலையின்றி கூலாக பதில் சொன்ன ரோகித் சர்மா

ராய்ப்பூர் : இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

அவர் கடைசியாக செப்டம்பர் இரண்டாம் தேதி 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார்.

ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ரோகித் சர்மா 2020 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் சதம் அடித்தார்.

50 இன்னிங்ஸ்

50 இன்னிங்ஸ்

தற்போது 50 இன்னிங்ஸ்களுக்கு மேல் சதம் அடிக்காமல் ரோகித் சர்மா விளையாடி வருகிறார். இந்திய அணியின் முழு நேர கேப்டன் ஆன பிறகு ரோகித் சர்மாவால் இதுவரை மூன்று இலக்க மைல் கல்லை எட்ட முடியவில்லை. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 41 சதம் அடித்திருக்கிறார். இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதத்தை அடித்திருக்கிறார்.

பாண்டிங் சாதனை

பாண்டிங் சாதனை

இன்னும் இரண்டு சதங்கள் அடித்தால் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி சச்சின் ,விராட் கோலிக்கு பிறகு மூன்றாவது இடத்தை அவர் பிடிப்பார். எனினும் ரோகித் சர்மா, கோலி இருந்தது போல் மோசமான பார்மில் இல்லை. அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அதனை அவர் பெரிய ஸ்கோராக மாற்றவில்லை. இது குறித்து ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது .

 ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

அதற்கு பதில் அளித்த அவர் என்னுடைய ஆட்டத்தின் முறையை நான் கொஞ்சம் மாற்றி வருகிறேன். தற்போது நான் அதிரடியாக ஆடி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்புகிறேன். சதத்தை விட தற்போது அதுதான் முக்கியம் என நான் கருதுகிறேன். நான் சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியும்.ஆனால் அது பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை .என்னுடைய பேட்டிங் முறை எனக்கு மகிழ்ச்சி தான். எப்போதும் போல் அதிரடியாக ஆட வேண்டும் என நினைக்கிறேன்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கண்டிப்பாக சதம் அடிக்கும் நாள் மிக விரைவில் வரும் என்று ரோகித் சர்மா கூறினார். தற்போது தொடக்க வீரராக விளையாடும் சுப்மான் கில் முதலில் மெதுவாக விளையாடி பிறகு அதிரடியை காட்டுகிறார். இதனால் ரோகித் சர்மா தொடக்கத்தில் அதிரடியாக ஆடி எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்க விரும்புகிறார். இதன் காரணமாக ரோகித் சர்மாவால் சதம் அடிக்க முடியவில்லை.

Story first published: Sunday, January 22, 2023, 10:24 [IST]
Other articles published on Jan 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+