கடைசி வரை போராடிய இந்தியா.. காயத்தையும் மீறி ரோகித் அதிரடி அரைசதம்.. தொடரை வென்ற வங்கதேசம்
டாக்கா : வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை 2க்கு0 என்ற கணக்கில் இழந்தது.
வங்கதேச மண்ணில் தொடர்ந்து 2 முறை தொடரை இழந்து இந்திய அணி சோகமான சாதனையை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதடிலல் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா ஃபில்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் விளையாடவில்லை.

சரிந்த வங்கதேசம்
முகமது சிராஜ் வீசிய பந்தில் வங்கதேச தொடக்க வீரர் அனாமுல் ஹக் எல்பி டபிள்யூ ஆனார். இதே போன்று கேப்டன் லிட்டன் தாஸ் ஸ்டம்பையும் முகமது சிராஜ் பதம் பார்த்தார். இதனைத் தொடர்ந்து . வங்கதேச வீரர் ஷாண்டோ உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் ஒரே ஒவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த, வங்கதேச அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அபார சதம்
அப்போது மகமுதுல்லாவுடன் ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் , பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.அதன் பிறகு, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்து அசத்தியது. மகமுதல்லா 77 ரன்களில் வெளியேற, மெஹதி ஹசன் சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

ராகுல் முடிவு
இதனையடுத்து தொடக்க வீரராக விராட் கோலி ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். என்ன காரணத்திற்காக தெரியவில்லை. விராட் கோலி அதிரடியாக பவுண்டரி விளாசினாலும், 5 ரன்களில் போல்ட் ஆனார். ஷிகர் தவான் 8 ரன்களில் வெளியேற, வாசிங்டன் சுந்தர் 11 ரன்கள் சேர்த்து அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை வீணடித்தார். கஎல் ராகுல் 28 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் அபாரம்
தடுமாறி கொண்டு இருந்த இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் ஜோடி பாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய கட்டத்தில் 82 ரன்கள் சேர்த்து வெளியேற, அக்சர் பட்டேலும் அரைசதம் கடந்து பெவிலியன் திரும்பினார். இந்தியா தடுமாறிய நிலையில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் களத்திற்கு வந்த ரோகித் சர்மா, சிக்சர், பவுண்டரி என விளாசினார்.

ரோகித் அதிரடி வீண்
எனினும் 48வது ஓவரில் சிராஜ் ஒரு ரன் கூட அடிக்காமல் போனார். இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ரோகித் சர்மா 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடிக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தை யாக்கராக வீச, ரோகித்தால் அதனை அடிக்க முடியவில்லை இதன் மூலம் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications