இந்த பட்டியலில் கங்குலியை பின் தள்ளப் போகும் ரோஹித் சர்மா.. 5வது ஒருநாள் போட்டியில் இதை செய்வாரா?
Recommended Video

ஹாமில்டன் : இந்திய அணியில் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோஹித் சர்மா விரைவில் கங்குலியை முந்தி புதிய சாதனை ஒன்றை செய்ய உள்ளார்.
நியூசிலாந்து தொடரின் கடைசி போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் கங்குலியை முந்துவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரோஹித் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரோஹித் 22 சதங்கள்
இதுவரை ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 22 சதங்கள் அடித்து, அதிக ஒருநாள் போட்டி சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் கங்குலியுடன் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கங்குலியை பின் தள்ளுவார்
ரோஹித் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் கங்குலியை நான்காம் இடத்துக்கு தள்ளி தனி ஒருவராக மூன்றாம் இடத்தை பிடிப்பார். மேலும், 23 சதங்களுடன் உலகளவில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலுடன் ஏழாம் இடத்தை பகிர்ந்து கொள்வார்.

சதம் அடிப்பாரா ரோஹித்?
நியூசிலாந்து தொடரில் சதம் அடித்து இந்த சாதனையை ரோஹித் முந்துவார் என கருதப்பட்டது. ஆனால், முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ரோஹித் சதம் அடிக்கவில்லை. இதனால், மீதமுள்ள கடைசி போட்டியில் ரோஹித் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு?
நியூசிலாந்து தொடர் முடிந்த பின் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது இந்தியா. அந்த தொடரில் இந்தியா முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து பரிசோதனை முயற்சிகள் செய்ய வாய்ப்புள்ளது. ரோஹித்துக்கு அந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதனால், ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடரின் கடைசி போட்டியில் சதம் அடிப்பாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோஹித் கடந்த போட்டியில் 200வது ஒருநாள் போட்டி என்ற மைல்கல்லை எட்டினார். எனினும், அந்த போட்டியில் ரோஹித் 7 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றினார்.


Click it and Unblock the Notifications