Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஏமாந்து போற தம்பியை டீமை விட்டு தூக்குங்க.. ஹிட்மேனை ஆட வைங்க.. உண்மையை போட்டு உடைத்த கங்குலி!

Recommended Video

IND vs WI 2019 : Rohit Sharma may never get chance in test matches again

மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக ஆடவில்லை. அவருடைய குறிப்பிட்ட பலவீனம் ஒன்று மீண்டும், மீண்டும் நிரூபணம் ஆகிக் கொண்டே இருந்தது. தன் பலவீனத்தால் அவராகவே விக்கெட்டை தாரை வார்த்து வந்தார்.

உண்மை சொன்ன கங்குலி

உண்மை சொன்ன கங்குலி

இந்த இரண்டையும் முடிச்சுப் போட்டு, தான் முன்பே கூறியது போல ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இறக்குங்கள். இந்திய அணியின் துவக்கம் சரியாக இல்லை என கூறி இருக்கிறார் கங்குலி. ராகுலை பலவீனத்தை பற்றி ஒரே வரியில் உண்மையை அதிரடியாக கூறி இருக்கிறார்.

ரோஹித் சர்மா நிலை

ரோஹித் சர்மா நிலை

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா ஹிட்மேன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அதிரடியால் மிரட்டி வருகிறார். மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். அதே போல, டி20 போட்டிகளிலும் அதிக ரன்கள், சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இடம் இல்லை.

விஹாரி, ரஹானே அபார ஆட்டம்

விஹாரி, ரஹானே அபார ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே, ஹனுமா விஹாரி மிடில் ஆர்டரில் களமிறங்கினர். அவர்கள் அபாரமாக ரன் குவித்து தங்கள் இடத்தை தக்க வைத்தனர்.

ராகுல் சொதப்பல்

ராகுல் சொதப்பல்

அதே சமயம், இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடையில் இருக்கும் ப்ரித்வி ஷாவுக்கு பதில் வாய்ப்பு பெற்ற ராகுல் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 2 டெஸ்ட் போட்டிகளில், 4 இன்னிங்க்ஸ்களில் 101 ரன்கள் எடுத்தார்.

பலவீனம் என்ன?

பலவீனம் என்ன?

அவருடைய பலவீனம் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது தான். நன்றாக துவக்கம் பெற்றாலும் தவறான ஷாட் அடித்து ஆட்டமிழந்து விடுவார். அது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தொடர்ந்தது.

கங்குலி அதிரடி

கங்குலி அதிரடி

இந்த நிலையில் தான் கங்குலி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் ராகுல் பற்றி உடைத்து பேசி இருக்கிறார். இந்திய அணியின் துவக்க வீரர்களில் மாயங்க் அகர்வால் நன்றாக இருக்கிறார். அவருக்கு இன்னும் வாய்ப்புகள் அளிக்கலாம்.

ஏமாந்து போகிறார்

ஏமாந்து போகிறார்

மற்றொரு துவக்க வீரர் ராகுல் எளிதாக ஏமாந்து விடுகிறார். அதனால், முன்வரிசை பேட்ஸ்மேன்களுக்கான இடம் காலியாக உள்ளது என அதிரடியாக கூறி உள்ளார் கங்குலி. அந்த துவக்க வீரர் இடத்துக்கு ரோஹித் சர்மாவை இறக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

உலகக்கோப்பைக்கு பின்..

உலகக்கோப்பைக்கு பின்..

உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கலக்கினாலும், டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். ரஹானே, ஹனுமா விஹாரி நன்றாக ஆடியதால் மிடில் ஆர்டரில் இடம் இல்லை. அதனால், டெஸ்டில் ரோஹித் சர்மாவை துவக்க வீரராக களமிறக்கலாம் என்பதே கங்குலியின் எண்ணம்.

குழப்பத்தில் கோலி

குழப்பத்தில் கோலி

கேப்டன் கோலி தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயம் கோலி குழப்பத்தில் தான் இருப்பார். ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனால் விமர்சனத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

Story first published: Thursday, September 5, 2019, 19:37 [IST]
Other articles published on Sep 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+