For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்ச்சையில் ரோஹித் சர்மா.. கேட்ச் பிடித்ததாக ஏமாற்றினாரா? குற்றம் சாட்டிய ரசிகர்கள்

Recommended Video

அந்த கேட்ச் , சர்ச்சையில் ரோஹித் சர்மா, குற்றம் சாட்டிய ரசிகர்கள்- வீடியோ

பெங்களூரு : இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதின.

மும்பை அணியின் கேப்டனாக இந்த போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா ஸ்லிப்பில் தரைக்கு நெருக்கமாக ஒரு கேட்ச் பிடித்தார். அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

ஹைதராபாத் முதலில் பேட்டிங்

ஹைதராபாத் முதலில் பேட்டிங்

இந்த அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி 19வது ஓவரில் பேட்டிங் செய்து வந்த போது, அந்த அணியின் சந்தீப் அடித்த பந்து ஸ்லிப்பில் நின்று இருந்த ரோஹித் சர்மா வசம் சென்றது.

சரியான கேட்ச் தானா?

சரியான கேட்ச் தானா?

ரோஹித் சர்மா தரைக்கு மிக நெருக்கமாக அதை கேட்ச் பிடித்து விட்டு அவுட் செய்துவிட்டதாக கொண்டாடினார். களத்தில் நின்ற அம்பயர்கள் கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என முடிவு செய்ய முடியாமல், மூன்றாவது அம்பயரிடம் முடிவை கேட்டனர். வீடியோ காட்சி மூலம் மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். எனினும், அந்த வீடியோவில் தெளிவாக கேட்ச் பிடிக்கபட்டதா என கணிக்க முடியவில்லை.

ரோஹித் ஏமாற்றி விட்டார்

ரோஹித் சர்மா கேட்ச் பிடிக்கும் வீடியோ காட்சியை ட்விட்டரில் ஒரு ரசிகர் பதிவிட்டார். அதில் சிலர் ரோஹித் சர்மா தரையில் பட்ட பின்னரே ரோஹித் சர்மா கேட்ச் பிடித்துள்ளார் என கூறியுள்ளனர். ரோஹித் ஏமாற்றி விட்டார் என்றும் சிலர் கூறியுள்ளனர். இதனால், இந்த கேட்ச் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

மும்பை அரையிறுதியில் வெற்றி

மும்பை அரையிறுதியில் வெற்றி

இந்த போட்டியில் மும்பை அணி வென்றது. ஹைதராபாத் அணி நிர்ணயித்த 247 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடிய போது மழை குறுக்கிட்டது. அப்போது 25 ஓவர்களில் 155 ரன்கள் அடித்து 2 விக்கெட்கள் இழந்து இருந்தது மும்பை அணி. இந்தியாவின் விஜேடி முறையின் படி 25 ஓவர்களில் 95 ரன்கள் அடித்து இருந்தால் மும்பை அணி வெற்றி பெறலாம் என்ற நிலையில் 60 ரன்கள் கூடுதலாக அடித்து இருந்த மும்பை அணி அரையிறுதியை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

Story first published: Thursday, October 18, 2018, 13:41 [IST]
Other articles published on Oct 18, 2018
English summary
Rohit Sharma catch against Hyderabad in the Semi-finals of Vijay Hazare trophy becomes controversial.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X