மோசமான ரன் அவுட்டில் சிக்கிய ரோகித்.. வினோதமான முறையில் ஆட்டமிழந்த ராகுல்.. லக்கே இல்ல பா
டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பையும் கேஎல் ராகுல் வீணடித்து கொண்டார். ஆஸ்திரேலிய அணி தங்களது 2வது இன்னிங்சில் நேற்று களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹேட் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடியை காட்டினார். அதன் பிறகு அஸ்வினும், ஜடேஜாவும் புல்டோசர் போல் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் கட்டமைத்த இன்னிங்சை இடித்து தள்ளினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா கடைசி இன்னிங்சில் விளையாடியது.

ராகுல் அவுட்
குறைந்த இலக்கை எதிர்கொண்டு இந்தியா விளையாடும் போது , கடும் நெருக்கடியில் உள்ள ராகுல், அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் ராகுல் துரதிர்ஷ்டவசமாக ஒரு கேட்ச் ஆகி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

வினோத அவுட்
நாம் பேட்டிங்கில் விளையாடும் போது, அதுவும் கொஞ்சம் கூட பார்மில் இல்லாத போது ஒரு அளவிற்கு நமக்கு களத்தில் அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும். ஆனால் ராகுலுக்கு களத்திற்கு வெளியே அதிர்ஷ்டம் இருப்பதால் தான் தொடர்ந்து மோசமாக விளையாடினாலும் பிளேயிங் லெவனில் விளையாடுகிறார் என்பது வேறு விசயம். இன்று அடித்த பந்து கூட மற்ற ஃபில்டரின் உடலில் பட்டு விக்கெட் கீப்பரிடமே கேட்ச் ஆனது.

ரோகித் அதிரடி
இதனால் இதற்கு மேல் ராகுலுக்கு இடம் தருவது சரியான விசயமாக இருக்காது. சரி மறுமுனையில் அதிரடியாக விளையாடி அணி வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படாமல் பார்த்து கொண்டார் கேப்டன் ரோகித் சர்மா. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 31 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

மோசமான ரன் அவுட்
இந்த நிலையில் ரோகித் சர்மா அடித்த பந்தை ஹாண்ட்ஸ்கோம்ப் தூக்கி எறிந்தார். ஆனால், அதற்குள் 2 ரன்கள் ஓட அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் புஜாரா திடீரென்று நின்றுவிட, ரோகித் அதற்குள் எதிர் திசைக்கு வர ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக ரன் அவுட் ஆக்கி விட்டார்கள். இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.


Click it and Unblock the Notifications