லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்த சேட்டை நடுவர்களை குழப்பம் அடைய செய்தது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ரோகித் சர்மாவின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதேபோன்று தமிழக வீரர் அஸ்வினையும் ஆட்டத்தில் சேர்க்காதது ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் ரோகித் சர்மா கவலை கொள்ளவே இல்லை.வழக்கம்போல் ஆஸ்திரேலிய வீரர்கள் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் இவர் களத்தில் ஜாலியாகவே நின்றார்.

மேலும் இவர் செய்த சேட்டை ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அதிக அளவு ரன்கள் கொடுத்தனர். ஆனால் இன்று யுக்திகளை மாற்றி தொடர்ந்து ஷாட் பால்களை வீசினர். இதனை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரிக்கு முகமது சமி ஸ்டெம்பின் வலது பக்கத்தில் இருந்து வந்து வீசினார். அப்போது பந்து அலெக்ஸ் கேரியின் காலில் பட்டது.இதனால் எல்பிடபிள்யூ கேட்டனர். ஆனால் நடுவர் அதற்கு வழங்கவில்லை. எனினும் மூன்றாம் நடுவரின் உதவியை நாட மற்ற வீரர்கள் கேட்க பந்து ஸ்டெம்பை மிஸ் செய்திருக்கும் என்று ரோகித் சர்மா கேட்கவில்லை.

இதேபோன்று மீண்டும் பந்து காலில் பட்டதற்கு நடுவர் எல் பி டபிள்யூ தரவில்லை. இதனால் மூன்றாம் நடுவரின் உதவியை நாட மற்ற வீரர்கள் ரோகித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கினார்கள்.ஆனால் ரோகித் டி ஆர் எஸ் உதவியை நாடுவது போல் கை செய்கை காட்டிவிட்டு நடந்து சென்று விட்டார். இதனால் களத்தில் இருந்த நடுவர் இவர் டிஆர்எஸ் உதவி கேட்டாரா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தார்.
உடனே டி ஆர் எஸ் உதவி வேண்டுமா என நடுவர் கேட்டதற்கு நான் கையை வைப்பது போல் தான் காட்டினேன் தவிர drs சோதனை கேட்கவில்லை என இந்திய வீரர்கள் விளக்கம் அளித்தனர். ரோகித் சர்மாவுக்கு ஓவர் குசும்பாகி விட்டது என ரசிகர்கள் இந்த சம்பவத்தை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.