Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோகித் ஷர்மா! ஆனால், ரொம்ப...மெதுவாக

ஹாமில்டன்: அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம், ஒருநாள் போட்டிகளில், 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா.

அயர்லாந்துக்கு எதிரான இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியா இரண்டாவது பேட் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

ரோகித் ஷர்மா 34 ரன்களை தொட்டபோது, ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியாவின் 14வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

இரு இரட்டை சதங்கள்

இரு இரட்டை சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் இருமுறை இரட்டை சதம் அடித்த சாதனைக்கு சொந்தக்காரரான ரோகித் ஷர்மாவுக்கு இந்த சாதனை மேலும் ஒரு மைல் கல்லாகும். அவர் தனது 126வது போட்டியில் இந்த ரன்களை எட்டியுள்ளார்.

கோஹ்லி

கோஹ்லி

குறைந்த போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் விராட் கோஹ்லியாகும். அவர் 93வது போட்டியிலேயே 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை கடந்தார்.

கங்குலி, சித்து

கங்குலி, சித்து

கங்குலி 105 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார். நவ்ஜோத்சிங் சித்து 109வது போட்டியில் இச்சாதனையை படைத்தார்.

கம்பீர், சச்சின்

கம்பீர், சச்சின்

கம்பீர் 110வது போட்டியிலும், சச்சின் டெண்டுல்கர் 112வது போட்டியிலும் 4 ஆயிரம் ரன்களை கடந்தனர்.

டோணி, டிராவிட்

டோணி, டிராவிட்

டோணி 114வது போட்டியிலும், டிராவிட் 117வது போட்டியிலும் 4 ஆயிரம் ரன்களை தொட்டனர். ஆனால் ரோகித் ஷர்மா 126வது போட்டியில்தான் இதை எட்டியுள்ளார். அந்த வகையில் இது ரொம்ப மெதுவான ஆட்டம்தான்.

Story first published: Tuesday, March 10, 2015, 11:54 [IST]
Other articles published on Mar 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+