Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் நம்பர் 1 டி-20 கேப்டன்..!! ரோகித் சர்மா புதிய சாதனை.. நான் இல்ல, அணி தான் காரணம்..

தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.

இதன் மூலம் தொடர்ந்து 11 சர்வதேச டி20 போட்டிகளில் வென்று இந்திய அணி சாதனை படைத்தது. டி20 உலககோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக இந்தியா அணி தோல்வியை தழுவியது.

அதன் பின் இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என தொடர் வெற்றியை இந்தியா பெற்றது. மேலும் தொடர்ந்து 7 இருதரப்பு டி20 போட்டிகளை வென்று இந்தியா அசத்தியுள்ளது.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் டி20 போட்டியில் சொந்த மண்ணில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ரோகித் சர்மா 16 போட்டியிலும், இங்கிலாந்து கேப்டன் மார்கன் 15 போட்டியிலும், வில்லியம்சன் 15 போட்டியிலும் வென்றுள்ளனர். இதே போன்று சொந்த மண்ணில் அதிக டி20 போட்டியில் வென்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார்.

குறைசொல்ல முடியாது

குறைசொல்ல முடியாது

இந்த நிலையில், வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா, இது அணிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்ல விரும்பவிவல்லை. எதாவது ஒருநாள் இது போன்று நடக்கலாம். ஆனால் முதல் 15 ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கட்டுப்படித்தினார். ஆனால், கடைசி 5 ஓவர்கள் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

பாராட்டு

பாராட்டு

எங்கள் நடுவரிசை வீரர்களின் செயல்பாடு பாராட்டுத்தக்கும் வகையில் அமைந்ததுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஜொலித்து வருகின்றனர். கடைசி வரை ஒரு பேட்ஸ்மேன் நின்றால் சேஸிங் எளிதாகிவிடும் என நினைத்தேன். அதே போல், ஸ்ரேயாஸ் நின்றார். ஜடேஜா முதல் பந்திலிருந்ரே அதிரடியை காட்டினார். பொறுப்புகளை அவர்களே எடுத்து கொண்டு பணியை முடித்தது திருப்தி அளிக்கிறது.

வாய்ப்பு வரும்

வாய்ப்பு வரும்

சஞ்சு சாம்சன் திறமையான வீரர். அவர் போன்ற வீரருக்கு இது போன்று வாய்ப்பு வழங்குவது அவசியம். மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். ஞாயிற்றுகிழமை நடைபெறும் கடைசி போட்டியில் நான் விளையாடுவேனா இல்லையா என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

Story first published: Sunday, February 27, 2022, 0:31 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+