Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் ? ரிஷப் பண்ட் ? ரோகித் எடுத்த பலே முடிவு.. பாகிஸ்தானுக்கு எதிராக செம பிளான்

மெல்போர்ன் : பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக பிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டி20 உலககோப்பையில் தோல்வியை தழுவியது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களிலே ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆட்டம் இழந்து வெளியேறியதுதான்.

கடந்த முறை

கடந்த முறை

இதனால் இந்திய அணி அதிக ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. கடந்த ஆண்டு செய்த தவறை இம்முறை திருத்திக் கொள்ளும் வகையில் ரோகித் சர்மா முக்கிய முடிவு எடுத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள், இரண்டு ஆல் ரவுண்டர்கள், மூன்று வேகப் பந்து வீச்சாளர், ஒரு சுழற் பந்துவீச்சாளர் என்ற வீரர்களை பயன்படுத்தியது.

இந்தியா செய்த தவறு

இந்தியா செய்த தவறு

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பலமானது என்று தெரிந்தும், இந்திய அணி 7 பேட்ஸ்மேன்களை மட்டும் நம்பியே சென்றது. இது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் அந்த தவறை திருத்திக்கொள்ள ரோகித் சர்மா பிளான் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பலமாக இருப்பதால் நிச்சயம் பவர் பிளேவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

பலப்படுத்த முடிவு

பலப்படுத்த முடிவு

இதனால் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். அதன்படி ரிஷப் பண்ட் அல்லது தீபக் ஹூடா என இரண்டு பேரில் ஒருவரை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம் என ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளார். அதன்படி வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை நீக்கிவிட்டு பேட்ஸ்மேன் ஒருவரை கூடுதலாக சேர்க்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அஸ்வினுக்கு வாய்ப்பு?

அஸ்வினுக்கு வாய்ப்பு?

இதனால் நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என மூன்று பேட்ஸ்மேன்களும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அஸ்வினின் பேட்டிங் தகுதியை கருத்தில் கொண்டு சாஹலுக்கு பதிலாக அஸ்வினையும் சேர்க்க ரோகித் ஆயத்தமாகி வருகிறார். அதன் படி ரோகித்,ராகுல்,கோலி, சூர்யகுமார், ஹர்திக், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின், அக்சர் பட்டேல், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் என பிளேயிங் லெவன் இருக்கலாம்.

Story first published: Thursday, October 20, 2022, 16:15 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+