For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேண்டாம் விடுங்க என்ற பவுலர்.. ரோகித் எடுத்த தைரியமான முடிவு.. இது வேற லெவல் கேப்டன்ஷி

பெர்த் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா எடுத்த தைரியமான முடிவு ரசகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் சூர்யகுமார் 40 பந்துகளில் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

3 ரன்கள்

3 ரன்கள்

இதனையடுத்து, இந்திய அணி பந்துவீச தொடங்கியது. தென்னாப்பிரிக்க விக்கெட்டை வீர்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. இதனால் இந்திய அணி விரர்களும் ஆக்கோரஷமாக பந்துவீசினர். முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் தனது முதல் ஓவரை வீசினார்.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

முதல் பந்திலேயே பந்து பேட்டை விட்டு நகருவது போல் பந்தை ஸ்விங் செய்தார். இதனை அடிக்க முயன்ற குயின்டன் டி காக், ஸ்லிப்பில் நின்ற ராகுலிடம் பிடிப்பட்டார். இதனைத் தொடர்ந்து 3வது பந்தில் தான் மீண்டும் ஒரு பெரிய திருப்புமுனையை தந்தது. முதல் பந்து வெளியே செல்லும் வகையில் வீசிய அவர், இரண்டாவது பந்தை இன் ஸ்விங்காக வீசினார்.

டிஆர்எஸ்

டிஆர்எஸ்

இதனை கொஞ்சமும் கணிக்க முடியாத ரூசோவ், அதனை அடிக்க தவற, பந்து அவரது பேடில் பட்டது. இதற்கு நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். அப்போது பந்துவீசிய ஆர்ஸ்தீப் சிங்கே பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே செல்கிறது என்று ரிவியூ கேட்க வேண்டாம் என்று கூறினார். அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரிவியூ கேட்க கூறினார்.

ரோகித் முடிவு

ரோகித் முடிவு

அதற்குள் 15 நொடிகள், நம் மாத சம்பளம் போல் குறைந்து கொண்டே வந்தது. அப்போது ரோகித் தீர்மானமாக முடிவு எடுத்து ரிவியூவை கேட்டார். இதில் ரூசோவ் எல்பிடபிள்யூ ஆனது தெரியவந்தது. இதனையடுத்து இந்திய வீரர்கள் விக்கெட்டை உற்சாகமாக கொண்டாடினர். தோனியை போல், ரோகித் எடுத்த முடிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Story first published: Sunday, October 30, 2022, 20:00 [IST]
Other articles published on Oct 30, 2022
English summary
Rohit sharma decision to go for DRS Decision vs south Africa வேண்டாம் விடுங்க என்ற பவுலர்.. ரோகித் எடுத்த தைரியமான முடிவு.. இது வேற லெவல் கேப்டன்ஷி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+