Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நச்சென்று நான்கு திட்டம்”.. கோலியின் முக்கிய வியூகத்தை உடைத்தெறிந்த ரோகித் சர்மா.. தொடக்கமே அதிரடி!

மும்பை: இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றவுடன், செய்யவுள்ள 4 முக்கிய திட்டங்களை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Team India new captain Rohit Sharma says virat kohli is still a leader of the team | Oneindia Tamil

இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கோப்பை வென்றுக்கொடுக்காததால் கோலியை நீக்கிவிட்டு பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

எனினும் ரோகித் சர்மா கோப்பையை வென்றுவிடுவாரா எனக்கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கேப்டனானவுடன் தான் செய்யவுள்ள 4 முக்கிய விஷயங்களை ரோகித் கூறியுள்ளார்.

சாதனையை புறம் தள்ளுவேன்

சாதனையை புறம் தள்ளுவேன்

ரோகித் சர்மாவின் முதன்மை திட்டமாக தனிப்பட்ட சாதனைகளை விட கோப்பைகள் தான் முக்கியம் எனக்கூறியுள்ளார். அதாவது ஒரு விளையாட்டில் எத்தனை சதங்கள் அடிக்கிறோம், அடுத்தவர்களின் சாதனைகளை முறியடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. சாம்பியன்ஷிப் கோப்பைகளை எப்படியாவது வென்றுவிட வேண்டும். அதற்காக மட்டுமே முதலில் பணிபுரிய வேண்டும்.

 வீரர்களுக்கு வாய்ப்பு

வீரர்களுக்கு வாய்ப்பு

கோலி - ரவி சாஸ்திரி ஆகியோரின் பதவி காலத்தில், வீரர்கள் தங்களை நிரூபிக்க தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் அதனை மாற்றி அமைக்க ரோகித் சர்மா விரும்பியுள்ளார். அதாவது, சரியான வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தால் தான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பதற்றமின்றி பெரிய தொடர்களை எதிர்கொள்வார்கள் எனக்கூறியுள்ளார்.

 கடினமான சூழல்கள்

கடினமான சூழல்கள்

3வது திட்டமாக அனைத்து வீரர்களையும் மோசமான சூழல்களை எதிர்கொள்ள தயார் படுத்துவேன் என ரோகித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்களின் அரையிறுதி போன்ற நாக் அவுட் போட்டிகளில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்கள் கூட சரியலாம். ஆனால் அப்படிபட்ட சூழலில் இருந்து எப்படி மீண்டு வருவோம். மிடில் ஆர்டர் அந்த சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தான் அடுத்த ஒரு வருடத்திற்கு நான் வீரர்களை தயாராக வைப்பேன் எனக்கூறியுள்ளார்.

கேப்டன் முக்கியமில்லை

கேப்டன் முக்கியமில்லை

ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் கேப்டன்சி என்பது ஆட்டத்தில் குறைந்த அளவிலேயே தேவைப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வீரரும் சரியான முடிவுகளை அவர்களே எடுக்க வேண்டும். அதன்படி செயல்பட்டால் வெற்றி தான் எனக்கூறுகிறார். இதற்கு அவர் கூறிய உதாரணம், " மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. எனக்கு சிறப்பான வீரர்களை அணி நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுத்தது. அவர்களால் தான் வெற்றி உறுதியானது எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, December 10, 2021, 15:16 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+