Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி ரோஹித்து, பிட்சுப் பக்கம் போகாத... 'ஷாக்' கொடுத்த கியூரேட்டர்!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையே முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், பிட்ச்சை அருகே போய்ப் பார்க்க முயன்ற ரோஹித் சர்மாவை, மைதானத்தின் கியூரேட்டர் பிரபீர் முகர்ஜி தடுத்து நிறுத்தியதால் தர்மசங்கடத்துக்குள்ளானார் ரோஹித்.

ஸ்டிரிக்ட்டு... ஸ்டிரிக்ட்டு.. ஸ்டிரிக்ட்டு...

ஸ்டிரிக்ட்டு... ஸ்டிரிக்ட்டு.. ஸ்டிரிக்ட்டு...

இந்த வார்த்தைக்கு முற்றிலும் பொருத்தமானவர் பிரபீர் முகர்ஜி. இப்படித்தான் பிட்ச் வேண்டும் என்று கேட்ட கேப்டன் டோணிக்கே பெப்பே காட்டியவர் இந்த முகர்ஜி. அவரிடம் தற்போது சிக்கியுள்ளார் ரோஹித் சர்மா.

வயசானாலும் சிங்கம்ல...

வயசானாலும் சிங்கம்ல...

70 வயதுகளைத் தாண்டி விட்டபோதிலும் சிம்ம சொப்பனமாக பிட்ச் உலகில் வலம் வருபவர் முகர்ஜி. எப்போதுமே ஈடன் கார்டன் போட்டிகளில் போட்டியை விட முகர்ஜி போட்ட பிட்ச்தான் பேசப்படும். பாரபட்சமே பார்க்காமல் பிட்ச் ரெடி செய்பவர் முகர்ஜி.

ஆய்வுக்கு முயன்ற ரோஹித்

ஆய்வுக்கு முயன்ற ரோஹித்

இந்தப் பின்னணியில்தான் ரோஹித் சர்மா பிட்ச்சை ஆய்வு செய்ய முயன்று முகர்ஜியிடம் கடி வாங்கித் திரும்பியுள்ளார்.

வழக்கம்தானே...

வழக்கம்தானே...

வீரர்கள் போட்டிக்கு முன்பாக பிட்ச்சை ஆய்வு செய்வது வழக்கமானதுதான். ஆனால் போட்டது முகர்ஜியாச்சே.. விடுவாரா என்ன.. ரோஹித்தை அருகே போகக் கூட அவர் விடவில்லையாம்.

கேப்டன், பயிற்சியாளர் மட்டுமே பார்க்கலாம்

கேப்டன், பயிற்சியாளர் மட்டுமே பார்க்கலாம்

ரோஹித் சர்மா பிட்ச்சை ஆய்வு செய்வதற்காக அருகே போனபோது அவரை தடுத்து நிறுத்திய முகர்ஜி, கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் மட்டுமே பிட்ச்சை அருகே போய் ஆய்வு செய்யலாம். நீங்க போகக் கூடாது என்று கூறி நிறுத்தி விட்டார்.

உம்மென்று திரும்பிய ரோஹித்

உம்மென்று திரும்பிய ரோஹித்

முகர்ஜியிடம் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை ரோஹித். எனவே சட்டென்று திரும்பி விட்டார். ஆனால் அவரது முகம் அப்செட்டாக காணப்பட்டது.

Story first published: Tuesday, November 5, 2013, 13:12 [IST]
Other articles published on Nov 5, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+