Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா.. உங்களுக்கு இன்னும் வயசே ஆகல.. டேவட் வார்னர் சாதனையை சமன் செய்த ஹிட்மேன்

ஜெய்ப்பூர்: இந்திய நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்த டேவிட் வார்னரின் உலக சாதனையை சமன் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மும்பை அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் சிக்கிமுக்கு எதிராக லீக் ஆட்டத்தில் இந்த சாதனையை படைத்தார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணிக்காக களமிறங்கிய ரோஹித், வெறும் 62 பந்துகளில் சதம் அடித்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த விரைவான சதம், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் அக்டோபர் 11 அன்று அடித்த 63 பந்துகளில் சதம் அடித்த சாதனையை முறியடித்தார்.

Rohit sharma

உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்டரான ரோஹித், இந்தப் போட்டியில் 94 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 155 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது அபாரமான ஆட்டத்தால் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த 155 ரன்கள் அவரது ஒன்பதாவது 150 ரன்கள் மேல் அடிக்கப்பட்ட லிஸ்ட் ஏ ஸ்கோர் ஆகும்.

முன்னதாக, டேவிட் வார்னர் 2007 முதல் 2023 வரை விளையாடிய 210 லிஸ்ட் ஏ போட்டிகளில் 8886 ரன்கள் குவித்துள்ளார். அவர் 50 ஓவர் போட்டிகளில் ஒன்பது முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தியுள்ளார். தற்போது ரோஹித் ஷர்மாவும் ஒன்பது 150+ ஸ்கோர்களைப் பெற்று வார்னருடன் இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

ரோஹித்தின் ஒன்பது 150+ ஸ்கோர்களில், எட்டு இந்தியாவிற்காக 279 ஒருநாள் போட்டிகளிலும், ஒன்று மும்பை அணிக்காக விஜய் ஹஸாரே டிராபியிலும் எடுக்கப்பட்டவை. அவரது குறிப்பிடத்தக்க ஸ்கோர்களில் இலங்கைக்கு எதிராக 264, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 மற்றும் இலங்கைக்கு எதிராக 208* ஆகியவை அடங்கும். சமீபத்திய 155 ரன்கள், சிக்கிம் அணிக்கு எதிரானதாகும்.

வார்னரின் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் பயணம் 2009 முதல் 2023 வரை 14 ஆண்டுகள் நீடித்தது. ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய 161 ஒருநாள் போட்டிகளில் அவர் ஏழு முறை 150 ரன்களுக்கு மேல் அடித்தார். அவரது மற்ற இரண்டு 150+ லிஸ்ட் ஏ ஸ்கோர்கள் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய போது எடுககப்பட்டது.

மேலும், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ரோஹித் ஷர்மா விஜய் ஹசாரே டிராபியில் சதம் அடித்த இரண்டாவது வயதான வீரர் (38 ஆண்டுகள் 238 நாட்கள்) என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வங்கதேசத்தை சேர்ந்த அனுஸ்துப் மஜும்தார் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 39 வயதுக்கு மேற்பட்ட வயதில் 2023-24 சீசனில் சில சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Thursday, December 25, 2025, 11:34 [IST]
Other articles published on Dec 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+