Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவுக்கு அது கிடையவே கிடையாது.. இரட்டை சதம் அடிப்பதற்கு முன் டிக்ளேர் ஏன்? ரோகித் சர்மா விளக்கம்

மொஹாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பேட்டிங்கில் 175 ரன்கள், பந்துவீச்சில் 9 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விராட் கோலியின் 100வது டெஸ்டில் இந்தியா வென்றாலும், ஆட்டம் மூன்றே நாட்களுக்குள் முடிந்தது.

ரோகித் பாராட்டு

ரோகித் பாராட்டு

இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, கேப்டனாக முதல் டெஸ்டில் எனக்கு இது சிறந்த தொடக்கம் தான். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் போட்டி மூன்று நாட்களுக்குள் முடியும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இதற்கு காரணம், எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த செயல்பாடு தான்.

நல்ல காலம்

நல்ல காலம்

எதாவது ஒரு பந்து திரும்பும், அதில் இலங்கை வீரர்கள் தவறு செய்வார்கள் என்று நினைத்தேன். இந்திய கிரிக்கெட்டுக்கு உண்மையில் இது நல்ல காலம்.ஜடேஜா, அஸ்வின் இந்திய அணிக்காக பல விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதால் ஜெயந்த் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கினோம்.

தன்னிலம் இல்லாதவர்

தன்னிலம் இல்லாதவர்

ஜடேஜா 200 ரன்கள் அடிப்பதற்கு முன் அணியை டிக்ளேர் செய்ததற்கு காரணம், அது அணியுடன் முடிவும், ஜடேஜா எடுத்த முடிவும் தான். ஜடேஜா ஒரு தன்னலம் இல்லாத நபர். அதனால் தான் அவர் டிக்ளேர் செய்ய சொன்னார். அடுத்த டெஸ்ட் பகல் இரவு போட்டி. பிங்க் நிற பந்தில் விளையாட போகிறோம். அந்த ஆடுகளம் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை என்று கூறினார்.

ஜடேஜா கருத்து

ஜடேஜா கருத்து

ஆட்டநாயகன் விருது வென்ற ஜடேஜா பேசிய போது, மொலி எப்போதும் எனக்கு பிடித்த மைதானம். இங்கு வந்தாலே ஒரு நல்ல உணர்வு ஏற்படும். எப்போதும் போல் தான் பேட்டிங் செய்தேன், எந்த மாற்றமும் செய்யவில்லை. இதுவரை பிங்க் நிற பந்தில் டெஸ்ட் போட்டி விளையாடியது இல்லை. ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அடுத்த டெஸ்ட் வரும் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.

Story first published: Sunday, March 6, 2022, 20:25 [IST]
Other articles published on Mar 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+