Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்!

மும்பை : ரோஹித் சர்மா தன் மூன்றாவது ஒருநாள் போட்டி இரட்டை சதத்தை அடித்த போது அவரது மனைவி கண் கலங்கிய வீடியோ அப்போது வைரலாக பரவியது.

Recommended Video

List of Fastest runners in International cricket

அது குறித்து இப்போது அவர் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அனைவரும் நினைத்தது போல அது அவரது இரட்டை சதத்தை எண்ணி வந்த ஆனந்தக் கண்ணீர் அல்ல.

ரோஹித் அந்தப் போட்டியில் கீழே விழுந்தார். அதை நினைத்து தான் அவர் கண்ணீர் விட்டதாக கூறி உள்ளார் ரோஹித் சர்மா. அப்போது என்ன நடந்தது என்பதை அவர் கூறி உள்ளார்.

மூன்று இரட்டை சதம்

மூன்று இரட்டை சதம்

ரோஹித் சர்மா மட்டுமே கிரிக்கெட் உலகில் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை அடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக இரண்டும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இரட்டை சதமும் அவர் அடித்துள்ளார். இதில் அவரது மூன்றாவது இரட்டை சதம் 2017ஆம் ஆண்டு அடிக்கப்பட்டது.

அதிகபட்ச ரன்

அதிகபட்ச ரன்

முதல் இரட்டை சதம் 2013இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், இரண்டாவது இரட்டை சதம் 2014இல் இலங்கை அணிக்கு எதிராகவும் அடிக்கப்பட்டது. அப்போது அவர் 264 ரன்கள் குவித்தார். அதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் ஆகும்.

ரித்திகா சஜ்தே கண் கலங்கினார்

ரித்திகா சஜ்தே கண் கலங்கினார்

அவரது மூன்றாவது இரட்டை சதம் அடிக்கப்பட்ட போது அவரது மனைவி ரித்திகா சஜ்தே கண் கலங்கினார். அன்று அவர்களின் திருமண நாள். அதற்காக ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து பரிசளித்ததை அடுத்துத் தான் ரித்திகா கண் கலங்கினார் என அப்போது கூறப்பட்டது.

ரோஹித் அளித்த பேட்டி

ரோஹித் அளித்த பேட்டி

அந்த வீடியோ வைரலாக பரவியது, அது குறித்து இப்போது இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் எடுத்த பேட்டியில் கூறி உள்ளார் ரோஹித் சர்மா. அன்று உண்மையில் எதற்காக ரித்திகா கண் கலங்கினார்? திருமண நாளும் ஒரு காரணமா? என்பது பற்றி கூறினார்.

உண்மையான காரணம்

உண்மையான காரணம்

"நான் ஏன் அழுதாய்? என அவரிடம் கேட்டேன். அவர், நான் 196 ரன்கள் அடித்த போது என நினைக்கிறேன், அப்போது நான் டைவ் அடித்தேன். அப்போது நான் என் கையை பிசக வைத்துக் கொண்டேன் என அவர் நினைத்துக் கொண்டதாக கூறினார்."

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

"அது தான் அவருக்கு முக்கிய கவலை அளிக்கும் விஷயமாக இருந்தது. அவர் அப்போது அதன் காரணமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டார் என நினைக்கிறேன்." என்றார். மேலும் திருமண நாள் அன்று அந்த இரட்டை சதம் அடிக்கப்பட்டதால் அது ஸ்பெஷல் என்றார்.

ரசிகர்கள் அலப்பறை.. முடியலை

ரசிகர்கள் அலப்பறை.. முடியலை

ரோஹித் சர்மாவின் இந்த விளக்கம் மூலம் அவர் திருமண நாள் அன்று இரட்டை சதம் அடித்ததால் கண்ணீர் விடவில்லை என தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்த சம்பவம் நடந்த அன்று ரோஹித் சர்மா ரசிகர்கள் ட்விட்டரில் ரித்திகா அழுததை வைத்து என்னென்ன கதை கட்டினார்கள் என நினைக்கும் போது.. உஸ்ஸ்..ப்பா முடியலை!

Story first published: Saturday, June 6, 2020, 22:06 [IST]
Other articles published on Jun 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+