Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன்...அசால்டாக டேஞ்சரஸ் ஷாட்கள்...சதத்தின் பின்னணியை விளக்கிய ரோகித்

சென்னை: சென்னை ஆடுகளம் கடுமையானதாக இருந்த போதும், நான் எப்படி கையாண்டேன் என ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

முதல் நாளில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இந்திய அணி திணறிய போது ரோகித் சர்மா சிறப்பாக ஆடி 161 ரன்கள் எடுத்து அணியை மீட்டார். இந்நிலையில் தனது முதல்நாள் ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.

சதம்

சதம்

சென்னை ஆடுகளத்தை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வீரர்கள் சரிந்த நிலையில், மறுமுனையில் ரோகித் மட்டும் நிலையாக நின்று அதிரடி சதமடித்தார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்கியான ஸ்வீப் ஷாட்கள் அடித்து வியக்கவைத்தார்.

மீண்ட ரோகித்

மீண்ட ரோகித்

ரோகித் சர்மா சரிவர ஆடவில்லை என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக விராட் கோலி, கடந்த போட்டியில் ஓப்பனர்ஸ் சரியாக ஆடவில்லை என தாக்கினர். இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் சதம் அடித்து ரோகித் அசத்தியுள்ளார்.

விளக்கம்

விளக்கம்

தனது சதம் குறித்து பேசிய ரோகித், என்ன செய்ய விரும்புகிறோமோ அதை செய்ய வேண்டும். ஸ்வீப் ஷாட் ஆட வேண்டும் என்றால் ஆடிவிட வேண்டும் எதை பற்றியும் யோசிக்க கூடாது எனக் கூறினார்.

தெரிந்ததுதான்

தெரிந்ததுதான்

சென்னை பிட்ச் சுழற்பந்திற்கு சாதகமாக நல்ல ஸ்விங் ஆகும் என்பது நமக்கு தெரியும். எனவே அதற்காக முன்கூட்டியே பயிற்சி மேற்கொண்டோம். பேட்டிங்கில் சிறிய மாற்றங்களை செய்துகொண்டோம் என தெரிவித்தார்.

Story first published: Sunday, February 14, 2021, 11:45 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+