“அது ஒன்று மட்டுமே எங்கள் திட்டம்..”.. பலமான இங்கிலாந்தை சாய்த்தது எப்படி??.. ரோகித் சர்மா விளக்கம்!
பெர்மிங்கம்: இந்திய அணியின் அடுத்த திட்டம் என்னவென்பது குறித்து ரோகித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார்.
Recommended Video
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நேற்று பெர்மிங்கம்மில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் தொடரையும் 2 வெற்றியுடன் கைப்பற்றியது.

முதல் பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 26 ரன்களும் அடித்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இதன்பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் 46 ரன்களை விளாச, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது.

இந்திய அணி வெற்றி
171 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், இந்திய வீரர்களின் பவுலிங்கில் அடுத்தடுத்து வெளியேறினர். புவனேஷ்வர்குமாரின் வேகத்தில் டாப் ஆர்டர் சொற்ப ரன்களுக்கு வெளியேற, கேப்டன் மொயீன் அலி 35 ரன்களும், டேவிட் வில்லி 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 17 ஓவர்களில் 121 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

ரோகித் சர்மா விளக்கம்
இந்த வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா, இங்கிலாந்து எவ்வளவு பலமான அணி என்பதை அறிவோம். எங்கு சென்றாலும் வெல்வார்கள். எனவே அவர்களை வீழ்த்த நம்பிக்கை மட்டுமே பெரிய ஆயுதமாக வேண்டும். அதனை சரியாக செய்தோம். ஒருவர் ஆட்டம் முழுக்க களத்தில் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஜடேஜா இந்த மைதானத்தில் சதமடித்திருந்தார். அதனை அப்படியே தொடர்ந்துக்கொண்டு வந்துள்ளார்.

அடுத்தகட்ட திட்டம்
அடுத்த போட்டிக்காக காத்துக்கொண்டுள்ளோம். பெஞ்சில் எதிர்பார்த்து காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு தர நினைக்கிறேன். இதுகுறித்து பயிற்சியாளரிடம் நான் ஆலோசனை நடத்தவுள்ளேன். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவது தான் இந்திய அணியின் தற்போதைய திட்டமாக உள்ளது.


Click it and Unblock the Notifications