Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் தான் எங்களின் ஒரே நம்பிக்கை.. இந்திய அணியின் தற்போதைய நிலைமை என்ன??.. ரோகித் சர்மா விளக்கம்!

பிரிஸ்பேன்: இந்திய அணியின் முக்கிய நம்பிக்கை மற்றும் பலவீனம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்திய அணியின் பலம்

இந்திய அணியின் பலம்

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 23ம் தேதி மதியம் தொடங்குகிறது. நாட்கள் நெருங்கிவிட்ட போதும், இந்திய அணி இன்னும் முழுமையாக தயாராகாதது போன்று தெரிகிறது. இத்தனை நாட்கள் பவுலிங்கில் தான் பிரச்சினை என ரசிகர்கள் நினைத்த சூழலில், பேட்டிங்கும் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஆஸ்திரேலிய களத்தில் வேகம் அதிகமாக இருப்பதால், அந்த வேகத்தை பயன்படுத்தி பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற 2 பயிற்சி போட்டிகளிலும் ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மோசமாக சொதப்பினர். இதனால் 2 போட்டிகளிலும் இந்திய அணி 160 ரன்களை கூட தாண்டவில்லை.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்நிலையில் இந்திய அணியின் நிலை குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், இந்த தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்களும் சந்திக்கும் கூட்டம் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்திய அணியின் ஒரே நம்பிக்கை சூர்யகுமார் யாதவ் மட்டுமே. அவர் தற்போது உள்ள நம்பிக்கையும், வேகமும் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. அவரின் சிறந்த ஃபார்ம் தொடரும் என நம்புகிறோம். விராட் கோலியும் நல்ல ஃபார்மில் இருக்கும் போதிலும் அவரை ரோகித் குறிப்பிடவில்லை.

ஷமி நிலைமை என்ன

ஷமி நிலைமை என்ன

தொடர்ந்து இந்தியாவுக்கு சந்தேகமாக பார்க்கப்படும் முகமது ஷமியின் ஃபார்ம் குறித்தும் ரோகித் பேசினார். அதில், ஷமியின் பவுலிங்கை நான் இன்னும் பார்க்கவே இல்லை. ஆனால் எனக்கு வந்த தகவலின்படி அவர் நல்ல ஃபார்மில் இருப்பதாக தெரிகிறது. NCA வில் நல்ல பயிற்சி பெற்று வந்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிஸ்பேன் நகரில் பயிற்சி முகாம் உள்ளது. அப்போது ஷமியின் செயல்பாட்டை பார்த்துவிட்டு, அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என ரோகித் கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 15, 2022, 18:58 [IST]
Other articles published on Oct 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+