Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதுதான் உண்மை”.. தோல்விக்கு காரணமான கடைசி ஓவர்.. ஆவேஷ் கானுக்கு தந்தது ஏன்?.. ரோகித் சர்மா விளக்கம்

செயிண்ட் கிட்ஸ்: இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்த கடைசி ஓவர் எதற்காக ஆவேஷ் கானுக்கு கொடுக்கப்பட்டது என்பதை ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.

Recommended Video

IND vs WI இந்தியா அதிரடியா தான் விளையாடும் - Rohit Sharma

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் சூழல் இருந்த போதும், கடைசி ஓவர் அனைத்தையும் மாற்றி அமைத்தது.

பரபரப்பு கட்டம்

பரபரப்பு கட்டம்

139 ரன்கள் என்ற குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் கடைசி 2 ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. அந்த சமயத்தில் தான் 19வது ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் ரோகித் கொடுத்தார். சிறப்பாக பந்துவீசிய அவர், வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ரோவ்மென் போவெலின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

கடைசி ஓவர் திருப்பம்

கடைசி ஓவர் திருப்பம்

இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் என்ற சூழல் இருந்த போது, அனைவரும் புவனேஷ்வர் குமாரிடம் ரோகித் ஓவர் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் அனுபவமே இல்லாத ஆவேஷ் கானுக்கு கொடுத்தார். ஆனால் அந்த ஓவர் சரியாக போகவில்லை. முதல் பந்தே நோ பால், அடுத்த பந்து சிக்ஸர், 2வது பந்து பவுண்டரி என சென்றது. மேலும் இந்தியாவும் தோல்வியடைந்தது.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்நிலையில் இந்த தவறான முடிவுக்கு ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். புவனேஷ்வர்குமாரிடம் ஓவர் கொடுத்தால் என்ன செய்வார் என்பது நமக்கு தெரியும். ஏனென்றால் இத்தனை ஆண்டுகளாக அவர் சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் போன்றோருக்கு இந்த சமயத்தில் வாய்ப்பு தரவில்லை என்றால், அவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பது தெரியாமலேயே போய்விடும்.

ஆதரவுக்கொடுப்பேன்

ஆதரவுக்கொடுப்பேன்

இது ஒரே ஒரு போட்டி தான். அவர்களிடம் திறமை உள்ளது. தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆதரவாக நின்று வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள். 139 என்ற குறைந்த இலக்குகள் 13 - 14 ஓவர்களுக்கு அடித்துவிடுவார்கள். ஆனால் எங்கள் பவுலர்கள் அதனை கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்றது மகிழ்ச்சியாக உள்ளது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 2, 2022, 17:08 [IST]
Other articles published on Aug 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+