Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா உடல்தகுதி சோதனையில் வெற்றியா? தோல்வியா? பிசிசிஐ சொல்வது என்ன?

மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 19.4 மதிப்பெண்ணுடன் யோ-யோ உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில், அவர் தோல்வியை தழுவியதாகவும் கூறப்படுகிறது. இதனால் எது உண்மையானது என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில்வழக்கமான உடற்தகுதி பரிசோதனையில் ரோஹித்துடன், இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஆசியக் கோப்பை 2025 அணியின் பல உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Rohit sharma

ஆனால், ரோஹித்தின் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ வெளியிடவில்லை. விதிமுறைகளின்படி, உடற்தகுதி பரிசோதனையிடல பெறும் மதிப்பெண்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படுகின்றன மற்றும் பொதுவில் வெளியிடப்படக்கூடாது. உண்மையில், பரிசோதனை முடிவுகள் கசிந்தால், சம்பந்தப்பட்ட வீரர்கள் கடுமையான நடவடிக்கை பாயும்.

அணியில் இருந்து நீக்கப்படுதல் அல்லது ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கம் போன்றவற்றை எதிர்கொள்ளலாம் என்று பிசிசிஐ ஏற்கனவே எச்சரித்துள்ளது. 'இந்த விதிகளை கருத்தில் கொண்டு, பிசிசிஐ அல்லது அதன் பிரதிநிதிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரோஹித்தின் மதிப்பெண் குறித்த தகவல் எதுவும் உண்மையல்ல.

ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு முதல் முறையாக உடற்தகுதி பரிசோதனையை எடுத்துள்ளார். இது குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், "அனைத்து வீரர்களும் சீசனுக்கு முந்தைய உடற்தகுதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், இது ஒப்பந்தப்படி கட்டாயமாகும்."

இந்த பரிசோதனைகள், வீரர்கள் எந்த பகுதிகளில் முன்னேற்றம் தேவை அல்லது எங்கு குறைவாக உள்ளனர் என்பதைபுரிந்து கொள்ள உதவுகின்றன. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு பெரிய இடைவெளி இருந்ததால், வீரர்களுக்கு வீட்டில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் முறை குறித்து வழங்கப்பட்டன," என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் அட்ரியன் லு ரூ, முன்பு அணியின் உடற்தகுதி மதிப்பீடுகளில் ரக்பியில் அமல்படுத்தப்பட்ட ரோன்கோ டெஸ்டை சேர்க்க பரிந்துரைத்திருந்தார். ஆனால், இது இப்போது அமல்படுத்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை 2025-க்கு முன்னதாக, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் பல இந்திய வீரர்கள் ஏற்கனவே உடற்தகுதி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அந்த சீசன்களில் பங்கேற்றனர்.

Story first published: Sunday, August 31, 2025, 22:00 [IST]
Other articles published on Aug 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+