Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவுக்கு காயம் என்ன ஆச்சு.. 4வது டி20 போட்டியில் பங்கேற்பாரா.. பிசிசிஐ வெளியிட்ட தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 3வது டி20 போட்டி நடைபெறும் போது காயம் ஏற்பட்டதால், ஆட்டத்திலிருந்து விலகினார்.

Recommended Video

IND vs SL தொடரில் திடீர் மாற்றம் செய்த BCCI *Cricket

எனினும் இந்திய அணியின் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு காயம் என்ன ஆச்சு, அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து பிசிசிஐ தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2 நாள் ஓய்வு

2 நாள் ஓய்வு

ரோகித் சர்மாவுக்கு லேசான முதுகில் தசைப் பிடிப்பு காயம் தான் ஏற்பட்டது. அதை மீறியும் அவர் விளையாடி இருந்தால் காயம் பெரியதாகி இருக்கலாம். அதனை கருத்தில் கொண்டு தான் ரோகித் சர்மா முன் எச்சரிக்கையாக போட்டியிலிருந்து விலகியதாக பிசிசிஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. தற்போது ரோகித் சர்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 நாள் ஓய்வில் இருந்தார்.

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

தற்போது ரோகித் சர்மா 4வது மற்றும் 5வது டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் அமெரிக்கா சென்றுள்ளார். 4வது போட்டி சனிக்கிழமை தான் நடைபெறும் என்பதால், மேலும் 2 நாள் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 100 சதவீதம் தசைப் பிடிப்பு வலியிலிருந்து ரோகித் குணமாக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு பலம்

இந்தியாவுக்கு பலம்

ரோகித் சர்மா கடைசி 2 போட்டியில் விளையாடுவது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. ஏற்கனவே ஜிம்பாப்வே தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ரோகித் சர்மாவும் கடைசி 2 டி20 போட்டிகளில் விளையாட ஆர்வமாக உள்ளார். இதனால் இந்திய அணிக்கு ரோகித் சர்மாவின் வருகை பலமாகவே பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் ஆசை

ரசிகர்களின் ஆசை

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து, அவரை பிடிக்காத ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மா உடல் எடையை குறைத்து , ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஒரு வேலை ரோகித் 4வது டி20 போட்டியில் விளையாடவில்லை என்றால் , அவருக்கு பதில் இஷான் கிஷன் களமிறங்கலாம்.

Story first published: Thursday, August 4, 2022, 16:59 [IST]
Other articles published on Aug 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+