Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதே ஜாதகம் தான் ரோஹித்துக்கும்.. உலகக்கோப்பை வெல்வது உறுதி.. அடித்துக் கூறும் ஜோதிடர்

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரை வெல்லப் போவது ரோஹித் சர்மா தான் என ஒரு நவீன ஜோதிடர் அடித்துக் கூறுகிறார்.

கிரீன்ஸ்டோன் லோபோ என்று ஒரு நவீன ஜோதிடர் முன்பு 2019 உலகக்கோப்பை, கால்பந்து உலகக்கோப்பை போன்ற தொடர்களின் போது எந்த அணி உலகக்கோப்பை வெல்லும் என சரியாக கணித்து கூறி இருக்கிறார்.

அவர் 2023 ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், எந்த அணி வெல்லும் என்ற தன் கணிப்பை கூறி இருக்கிறார்.

Rohit Sharma follows Lionel Messi astrology

அவர் மிகவும் குறிப்பாக, ரோஹித் சர்மாவுக்கு சாதகமான சூழல் இருப்பதால் அவர் தான் உலகக்கோப்பை வெல்வார் என அடித்துக் கூறி இருக்கிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் அர்ஜென்டினாவின் புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் கதையும், ரோஹித் சர்மாவின் கதையும் ஒரே மாதிரி இருப்பது தான் என கூறி இருக்கிறார்.

இந்த ஜோதிடர் ஒவ்வொரு அணியின் வெற்றி, தோல்வியையும் அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை வைத்து கணித்து இருக்கிறார்.

அத்துடன் இயல்பில் அந்த அணி மற்றும் கேப்டனின் செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் செயல்பாட்டின் அடிப்படையிலான கணிப்புகள் மற்றும் கொஞ்சம் ஜோதிடம் என கலந்து கட்டி தன் கணிப்பை கூறி இருக்கிறார்.

அதன்படி, லியோனல் மெஸ்ஸி மற்றும் ரோஹித் சர்மாவை ஒப்பிட்டு இருக்கிறார். முதலில் இந்த உலகக்கோப்பை 1987இல் பிறந்தவர்களுக்கானது என அவர் கூறி இருக்கிறார். அதை வைத்து பார்த்தால் ரோஹித் சர்மா மற்றும் ஷகிப் அல் ஹசன் என இரண்டு கேப்டன்கள் மட்டுமே அந்த ஆண்டில் பிறந்தவர்கள்.

இந்த இருவரின் அணியில் உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்திய அணிக்கே அதிகம். மேலும், லியோனல் மெஸ்ஸியும் 1987இல் பிறந்தவர் தான். இதே காரணத்தை தான் இந்த ஜோதிடர் கால்பந்து உலகக்கோப்பையின் போதும் கூறி இருந்தார்.

அவர் இந்த ஒற்றுமையை குறிப்பிட்டு இருக்கிறார். மெஸ்ஸி உலகக்கோப்பை வெல்லும் முன்பு தன் கிளப்பை பல முறை கோப்பை வெல்ல வைத்தார். ஆனால், நாட்டுக்காக வெல்லவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதன்பின் அவர் தென் அமெரிக்க அளவிலான கால்பந்து தொடரான கோபா அமெரிக்காவில் அர்ஜென்டினா அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். பின் உலகக்கோப்பையையும் வென்று கொடுத்தார்.

அதே போல, இப்போது ரோஹித் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். ஆனால், டி20 உலகக்கோப்பையை இழந்து நாட்டுக்காக கோப்பை வெல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

அதன் பின் ஆசிய அளவிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது உலகக்கோப்பை தொடருக்கு வந்துள்ளார். ரோஹித் சர்மாவின் கதை அப்படியே மெஸ்ஸி கதையை ஒத்துப் போகிறது. இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் வேறு.

இதை எல்லாம் வைத்து அந்த ஜோதிடர் ரோஹித் சர்மாதான் இந்த உலகக்கோப்பை தொடரை வெல்வார் என அடித்துக் கூறுகிறார். அதற்காக மற்ற அணிகளின் வாய்ப்பை அவர் மறுக்கவில்லை. நியூசிலாந்து அணியை தவிர மற்ற அணிகளுக்கு சிறிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

ஆனால், சூழ்நிலைகளை வைத்தும், பிறந்த ஆண்டை வைத்தும் ரோஹித் சர்மாவுக்கு மிக அதிக வாய்ப்பு என கூறுகிறார்.

Story first published: Wednesday, October 4, 2023, 14:25 [IST]
Other articles published on Oct 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+