For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீடியோ-பாஸ்போர்ட்டை மறந்து வச்சிட்டு வந்த ரோகித் சர்மா.. இந்திய அணி கிளம்பும் போது நிகழ்ந்த ருசிகரம்

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.

இதன் மூலம் இரண்டு முறை கேப்டனாக ஆசிய கோப்பையை வென்ற வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு கேப்டன் ஆன ரோகித் சர்மா அந்த தொடரில் விராட் கோலி இல்லாமலேயே கோப்பையை வென்றார்.

Rohit sharma forgets his passport during his depature from srilanka

ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டன் ஆகவும் எதிரணிக்கு கடும் நெருக்கடிகளை கொடுக்கக்கூடிய வீரராக இருக்கிறார்.ஆனால் ரோகித் சர்மாவுக்கு இயற்கையாகவே ஒரு பிரச்சனை இருக்கிறதாம். நாம் எப்படி பைக் சாவியை மறந்து வைத்துவிட்டு பிறகு அம்மாவிடம் கேட்போமோ அதே போல் ரோஹித் சர்மா அனைத்தையும் மறந்து வைத்துவிட்டு பிறகு தேடுவாராம். இது குறித்து 2017 ஆம் ஆண்டு விராட் கோலி ஒரு முறை பேட்டியில் கூறியிருக்கிறார்.

நான் ரோகித் சர்மா போல் பொருளை மறந்து வைத்துவிட்டு தேடும் நபரை பார்த்ததில்லை என்று கூறி இருந்தாராம். அதற்கு ஏற்றார் போல் நேற்றும் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. ஆசிய கோப்பை போட்டி ஃபைனல் எதிர்பார்த்ததை விட முன்பே முடிந்து விட்டதால் இந்திய அணி விரைவாக தாய் நாட்டுக்கு திரும்பி சென்றார்கள். அப்போது அணி வீரர்கள் அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் ரோகித் சர்மாவும் ஏறி வந்து விட்டார்.

அப்போதுதான் தெரிந்தது தமது பாஸ்போர்ட்டை மறந்து வைத்து விட்டு பிறகு அதனை எங்கே இருக்கிறது என்று ரோகித் தேடி இருக்கிறார். இதனால் பேருந்து புறப்படாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. அப்போது மற்ற வீரர்கள் ரோகித் சர்மாவை பார்த்து கிண்டல் அடித்தார்கள். ரோகித் சர்மாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல பொருட்களை அணியின் உதவியாளர் ஒருவர் எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்டு பிறகு ரோகித் சர்மா புறப்பட்டு சென்றார். ஐந்து முறை ஐபிஎல் கோப்பை இரண்டு முறை ஆசிய கோப்பை வென்ற கேப்டன் மறதி பிரச்சனையால் அவதிப்படுவது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Story first published: Monday, September 18, 2023, 16:22 [IST]
Other articles published on Sep 18, 2023
English summary
Rohit sharma forgets his passport during his depature from srilanka பாஸ்போர்ட்டை மறந்து வச்சிட்டு வந்த ரோகித் சர்மா.. இந்திய அணி கிளம்பும் போது நிகழ்ந்த ருசிகரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+