Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பெரிய வாய்ப்பு போயிடுச்சே” கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல் செய்த தவறு.. கடுப்பான ரோகித்.. என்ன ஆனது

நாக்பூர்: ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அமைந்திருந்த மிகப்பெரிய வாய்ப்பை கே.எல்.ராகுல் கடைசி நேரத்தில் கெடுத்ததால் கேப்டன் ரோகித் சர்மா கடும் அதிருப்தியடைந்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியை முதல் நாளிலேயே வெறும் 177 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கி அசத்தியுள்ளது இந்திய அணி. இது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் அட்டகாசமான அடிதளம் கிடைத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

நாக்பூர் பிட்ச்-ல் முதல் நாலில் அனைவரும் எதிர்பார்த்த அளவிற்கு பந்து ஸ்பின் ஆகவில்லை. எனினும் ஆஸ்திரேலியா தடுமாறியது. ஆனால் சரியாக புரிந்து விளையாடிய இந்திய ஓப்பனர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ரன் குவித்தனர். ஒருபுறம் அதிரடி அணுகுமுறையை காட்டிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்களை குவித்துள்ளார். மறுமுணையில் பார்டர்னர்ஷிப்பாக நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 71 போட்டிகளில் 20 ரன்களை அடித்தார்.

அட்டகாச பார்ட்னர்ஷிப்

அட்டகாச பார்ட்னர்ஷிப்

ஆஸ்திரேலிய பவுலர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் இந்திய அணி 70 ரன்களுக்கும் மேல் விக்கெட் இழப்பின்றி சென்றது. இதனால் முதல் நாளை பின்னடைவு இன்றி முடிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் முதல் நாளின் கடைசி ஓவருக்கு முன்னதாக கே.எல்.ராகுல் அதிர்ச்சி தந்தார். மர்ஃபி வீசிய பந்தை ட்ரைவ் ஆட நினைத்து அவரிடமே கேட்ச்-ஐ கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 71 பந்துகளை சந்தித்த அவர் ஒரே ஒரு பவுண்டரியுடன் 20 ரன்களை மட்டுமே அடித்தார்.

ரோகித் சர்மா அதிருப்தி

ரோகித் சர்மா அதிருப்தி

கே.எல்.ராகுலின் விக்கெட்டால் அவரை விட கேப்டன் ரோகித் சர்மா தான் கடும் அதிருப்தியடைந்தார். களத்திலேயே தலையை மேலே தூக்கி புலம்பினார். இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கடும் போராட்டம் நடந்தது. அட்டகாசமான ஃபார்மில் உள்ள சுப்மன் கில்லை ஓப்பனிங் ஆடை வைக்க குரல்கள் எழுந்தன. எனினும் ராகுல் மீது அதீத நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா கில்லை நீக்கிவிட்டு, ராகுலை கொண்டு வந்தார்.

2வது சலுகை

2வது சலுகை

இதே போல கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தால் காயம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவரை முழு நேர பேட்ஸ்மேனாக மட்டும் அணிக்குள் சேர்த்தனர். தொடர்ச்சியாக பல சொதப்பல்களை கொடுத்து வந்த போதும் ஆதரவுக் கொடுக்கும் ரோகித் சர்மாவுக்கு மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார் கே.எல்.ராகுல்.

Story first published: Thursday, February 9, 2023, 20:11 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+