உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?.. பிட்ச் குறித்த சீனியர்களின் விமர்சனம்.. கடுப்பில் கத்திய ரோகித்!
இந்தூர்: ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்ட் போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை அடுக்கி வந்த நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா காட்டமான பதிலை கொடுத்துள்ளார். இதனால் வாயடைத்து போயுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து முடிந்துள்ளது. இந்த முறையும் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 2 - 1 என பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கடைசி போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே இந்தியாவால் தொடரை கைப்பற்ற முடியும்.

பிட்ச் சர்ச்சை
என்னதான் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய பிட்ச் மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறையவே இல்லை. ஏனென்றால் ஆட்டத்தின் முதல் நாளன்றே 14 விக்கெட்கள் சரிந்தன. 2வது நாளில் 16 விக்கெட்கள் விழுந்துவிட்டன. 3வது நாளின் முதல் செஷனிலேயே வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் இந்திய களங்கள் மிகவும் மோசமாக உள்ளது என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

ரோகித் பதிலடி
இந்நிலையில் அதற்கெல்லாம் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முன்னாள் வீரர்கள் இதுபோன்ற களங்களில் எல்லாம் விளையாடியே இருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் எப்படி இந்த கருத்துகளை கூறுகின்றனர் என எனக்கு தெரியவில்லை. இது போன்ற களங்கள் தான் எங்களின் பலம். அதில் விளையாடுவதற்கு தான் நாங்கள் ஆசைப்படுகிறோம்.

உரிமை உள்ளது
சொந்த மண்ணில் விளையாடும் போது அனைத்து அணிகளுமே தங்களின் பலத்திற்கு ஏற்ற பிட்ச்-ல் ஆட வேண்டும் என்று தான் நினைக்கும். எனவே வெளியில் யார் என்ன கூறினாலும், அதை பற்றி எங்களுக்கு கவலையே கிடையாது. முடிந்தவரை வெற்றி பெற நினைப்போம். முடிவு வரவில்லை என்றால், திட்டத்தை மாற்றுவோம்.

லியோனை கேளுங்கள்
இந்தியாவில் போட்டி நடந்தால் மட்டும் ஏன் பிட்ச்-ஐ இழுக்கிறார்கள். நாதன் லியோன் இதே பிட்ச்-ல் தான் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் மட்டும் எப்படி நன்றாக ஆடினார். சட்டீஸ்வர் புஜாரா இதே களத்தில் அரைசதம் அடித்துள்ளார். உஸ்மான் கவாஜா எப்படி ஆடினார்? முதலில் பிட்ச் மீது குறைகூறுவதை நிறுத்த வேண்டும். நாம் எப்படி ஆடுகிறோம் என்பதில் தான் உள்ளது என ரோகித் சர்மா விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications