Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்ஜின் ஸ்டார்ட் ஆயிடுச்சு... பயிற்சியில் ஹிட்மேன்... பாராட்டிய பிசிசிஐ!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் வரும் 7ம் தேதி சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் வகையில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா நேற்றைய தினம் தனது குவாரன்டைனை முடித்துக் கொண்டு அணியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில, இன்று அவர் சில கேட்சிங் பயிற்சிகளை மேற்கொண்டார். இதன் புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 3வது போட்டி வரும் 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த 3வது போட்டியில் குறைந்த ஓவர்கள் போட்டியின் துணை கேப்டன் ரோகித் சர்மா விளையாட உள்ளார்.

கேட்சிங் பயிற்சிகள்

இதையொட்டி தனது குவாரன்டைனை சிட்னியில் முடித்த அவர், நேற்றைய தினம் அணியில் இணைந்தார். இதையடுத்து அவர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அணி வீரர்களுடன் இணைந்து இன்று சில கேட்சிங் பயிற்சிகளை மேற்கொண்டார். இந்த புகைப்படங்களை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இன்ஜின் ஸ்டார்ட் ஆகிவிட்டதாக பாராட்டு தெரிவித்துள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

தனது பிட்னசை இந்த மாதத்தின் துவக்கத்தில் நிரூபித்து தனது ஆஸ்திரேலிய பயணத்தை தவக்கினார் ரோகித். முன்னதாக ரோகித் சர்மா தனது குவாரன்டைனை முடித்தபின்பு அவரது பிட்னஸ் மீண்டும் சோதிக்கப்பட்டு அவர் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முக்கியமான 3வது போட்டி

முக்கியமான 3வது போட்டி

இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில், வரும் 7ம் தேதி நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதில் துவக்க வீரராக ரோகித் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Thursday, December 31, 2020, 18:21 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+